Home> India
Advertisement

சந்திராயன் 3! இந்தியர்களின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்... பாராட்டிய பிரதமர்

PM Modi ON Moon Landing: சந்திரயான் - 3 வெற்றியை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்

சந்திராயன் 3! இந்தியர்களின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்... பாராட்டிய பிரதமர்

புதுடெல்லி: உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சந்தர்பம் இன்று சாத்தியமான தருணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவை முத்தமிட்டது.. இது தொடர்பான அப்டேட்டை மாலை 5.20 மணியில் இருந்து இஸ்ரோ நேரலை தகவல்களை வழங்கியது.

நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வை மேற்கொள்ள கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், அடுத்தடுத்த சுற்றுப் பயண பாதை மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதாக வெளியான செய்திகள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

மக்களின் மனதில் உள்ள மகிழ்ச்சியை, பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். சந்திரயான் - 3 வெற்றியை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க | சந்திரயான்-3: கை குலுக்க காத்திருக்கும் நிலவும் விக்ரம் லேண்டரும்.. இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்!!

சந்திரயான்-3 வெற்றி குறித்து பேசியிஅ பிரதமர் மோடி, "இந்தியாவின் வெற்றிகரமான சந்திரன் பயணம் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல... இந்த வெற்றி மனித இனம் அனைவருக்கும் சொந்தமானது" என்று பெருமிதமாக சொன்னார்.

சந்திரயான்-3 திட்டத்துடன் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்பதில் இந்தியர்களாக நாம் அனைவரும் கர்வம் கொள்ளலாம் என்று பிரதமர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சந்திரயானின் வெற்றியை கொண்டாடும் இந்தியர்களில், இந்த பணியை செவ்வனே நிறைவேற்றியவர்களில் தமிழர்களுக்கு பங்குண்டு என்பது மகிழ்ச்சியான செய்தி. இந்தத் திட்டத்திற்காக இரவு பகலாக பல்வேறு விஞ்ஞானிகள பணியாற்றியுள்ளனர். 

மேலும் படிக்க | Chandrayaan 3 Updates: நிலவில் கால் பதித்தது சந்திரயான்-3.. மாபெரும் வெற்றி

அவர்களில் ந்திரயான் 3 வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி வீரமுத்துவேல் அனைவராலும் பாராட்டப்படுகிறார். இஸ்ரோ தலைவர் சோமநாத் குறிப்பிட்டு பாராட்டிய தமிழர் வீரமுத்துவேல், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். 

 மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ படித்த வீரமுத்துவேலுக்கு விண்வெளி துறையின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அவர், சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டமும், திருச்சி REC கல்லூரியில் பொறியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார்.

பிறகு, சென்னை ஐஐடியில் உயர்கல்வி படித்ததுடன் அவரது கல்வி ஆர்வம் முடிந்துவிடவில்லை. ஏரோ ஸ்பேஸ் துறையில் சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு, இன்று உலகத்தில் இந்தியாவை தலைநிமிர்ந்து நிற்கச் செய்த சந்திரயான் - 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார் விஞ்ஞானி வீரமுத்துவேல்.

மேலும் படிக்க | நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடாக மாறியது இந்தியா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More