Home> India
Advertisement

விவசாயிகள் போராட்டம் வாபஸ்! ஓராண்டுக்கு பிறகு வீடு திரும்பும் உழவர்கள்

வீட்டிற்கு செல்ல தயாராna விவசாயிகள்... சிங்கு எல்லையில் இருந்து கூடாரங்களை அகற்றும் வேலை தொடங்கியது    

விவசாயிகள் போராட்டம் வாபஸ்! ஓராண்டுக்கு பிறகு வீடு திரும்பும் உழவர்கள்

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. விவசாயிகள் சிங்கு எல்லையில் இருந்து கூடாரங்களை அகற்றத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் வீட்டிற்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்திற்கு பிறகு பேசிய விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சாருனி, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். 

விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாகவும் மத்திய அரசு (Centre withdraws Farm laws) உறுதிமொழிகளை அளித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச நிர்ணய விலை தொடர்பாக ஒரு குழுவை அமைப்பதாகவும், விவசாயிகள் மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெறுவதாகவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

fallbacks

"இழப்பீடு விஷயத்தைப் பொறுத்த வரை, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்கள் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளன" என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.

விவசாயிகளின் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு (Central Government) அனுப்பிய திட்ட வரைவு குறித்து விவசாயிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. 

டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்திற்கு பிறகு பேசிய விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சாருனி, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம் என்றும், ஆனால், ஜனவரி 15-ம் தேதி மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவோம். அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடரலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

அரசாங்கம் மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டதுடன், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் அவற்றை நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது தொடர்பாக அரசு எழுத்துப்பூர்வ முன்மொழிவை வழங்கியது, அதை விவசாயிகள் ஒப்புக் கொள்ளவிலை. இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு அனுப்பிய திட்ட வரைவு குறித்து விவசாயிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய கிசான் மோர்ச்சா புதன்கிழமை தெரிவித்தது. இது தொடர்பான கூட்டத்திற்கு பிறகு போராட்டம் வாபஸ் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

fallbacks

இந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி கடந்த ஓராண்டாக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் இருந்தும் விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். தற்போது விவசாயிகள் சிங்கு எல்லையில் இருந்து கூடாரங்களை அகற்றத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் வீட்டிற்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

READ ALSO | மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது மத்திய அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More