Home> India
Advertisement

ஜியோ இன்ஸ்டிடியூட் சிறப்பு அந்தஸ்துக்கு ஏன் தேர்வு? மத்திய அரசு விளக்கம்

இதுவரை தொடங்கப்படதா ஜியோ இன்ஸ்டிடியூட் எப்படி லைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றது என மத்திய அரசு விளக்கம்.

ஜியோ இன்ஸ்டிடியூட் சிறப்பு அந்தஸ்துக்கு ஏன் தேர்வு? மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் இருக்கும் பல்கலைக்கழகங்களை சர்வதேச அளவில் தரம் உயர்த்தும் நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் சிலவற்றை தேர்வு செய்து அவர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரும் தொகையை மானியமாக கொடுக்கப்படும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஜியோ பல்கலைக்கழகமும் ஒன்று. 

ஆனால் இதுவரை ஜியோ பல்கலைக்கழகம் தொடங்கவே படவில்லை. தொடங்கப்படதா ஒரு இன்ஸ்டிடியூட் எப்படி தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றது எனக் கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. 

இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டு துரை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 

 

 

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கலும், தற்போது புதிதாக தொடங்கப்பட உள்ள கல்வி நிறுவனங்கள் என கருத்தில் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 800 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் இதுவும் உலகின் தலைசிறந்த 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே தலைசிறந்த பட்டியலில் இல்லாத பல்கலைக்கழகத்திற்கு எப்படி இடம் தரலாம் எனக் கேள்வி எழுப்புவது தவறு. எனவே இதன் அடிப்படையிலேயே கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் சர்வதேச அளவில் தரம் உயரும் என தனது அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.

Read More