Home> India
Advertisement

CBSE 12th Result 2022: ரிசல்ட் இன்று! சில முக்கிய குறிப்புகள் உள்ளே

CBSE 12th Term 1 Result 2022: தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியின் உதவியுடன் தங்களின் term 1 மதிப்பெண்னை சரிபார்க்க முடியும்.

CBSE 12th Result 2022: ரிசல்ட் இன்று! சில முக்கிய குறிப்புகள் உள்ளே

புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளது. மாணவர்களின் Term 1 மதிப்பெண் அட்டை இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி இன்று 12ம் தேதி தேர்வு முடிவுகள் ஜனவரி 25ம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.

தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியின் உதவியோடு தங்களின் Term 1 மதிப்பெண் (CBSE 10th, 12th Term 1 Result 2022) அட்டையை சரிபார்க்க முடியும். மறுபுறம், 10 வது தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து எவ்வித செய்தியும் வெளியாகவில்லை. 

ALSO READ | பள்ளியில் கருகிய நிலையில் மாணவி மீட்பு! ஒற்றை வார்த்தையைச் சொல்லி உயிரிழந்த பரிதாபம்

தேர்வு முடிவை இங்கே சரிபார்க்கவும்
தேர்வு முடிவுகள் (CBSE Term 1) வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். cbseresults.nic.in உடன் results.gov.in இல் உங்கள் குழந்தையின் முடிவைப் பார்க்கலாம். இவை தவிர, CBSE (Central Board of Secondary Education) போர்டு தேர்வு முடிவுகள் UMANG செயலி, IVRS, SMS மற்றும் Digilocker தளமான digilocker.gov.in ஆகியவற்றிலும் பார்க்கலாம்.

தேர்வு மையங்களுக்கு சிபிஎஸ்இ வழங்கிய OMR முறையில் தேர்வு நடத்தப்பட்டது. வாரியத்தின் அறிவுறுத்தல்களின்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். எந்த மாணவரும் தேர்ச்சி பெற்றதாகவோ அல்லது தோல்வியடைந்ததாகவோ அறிவிக்கப்படமாட்டார்கள் மேலும் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களுடன் மதிப்பெண் அட்டை மட்டுமே வெளியிடப்படும். போர்டு தேர்வுகளின் இறுதி முடிவுகள் 2 ஆம் ஆண்டு தேர்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

மாதிரி தாள் வெளியிடப்பட்டது
இது தவிர, சிபிஎஸ்இ சமீபத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Term 2 மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டது. அதே நேரத்தில், இந்தத் தேர்வுகள் 2022 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். 

மதிப்பெண்களைச் சரிபார்ப்பதற்கான படிகள் இங்கே:
1: சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தை (cbse.nic.in) பார்வையிடவும்

2: முகப்புப் பக்கத்தில், 'CBSE 10th Term 1 Result 2022' அல்லது 'CBSE 12th Result 2022' இணைப்பைக் கிளிக் செய்யவும்

3: உங்கள் ரோல் எண், பிற விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

4: உங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகள் திரையில் காட்டப்படும்

5. உங்கள் முடிவைப் பதிவிறக்கி, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும். 

மதிப்பெண்ணைச் சரிபார்க்க இணையதளங்கள், பயன்பாடுகளின் பட்டியல்:
மாணவர்கள் DigiLocker செயலி மற்றும் இணையதளம் (digilocker.gov.in) மற்றும் UMANG இல் மதிப்பெண்களை சரிபார்க்கலாம். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை IVRS மற்றும் SMS மூலமாகவும் சரிபார்க்கலாம்.

ALSO READ | இளங்கலை பட்டப்படிப்பு மாணவரின் அற்புதமான கண்டுபிடிப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More