Home> India
Advertisement

CBI இயக்குனராக அலோக் வர்மா 77 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொறுப்பேற்பு!

சி.பி.ஐ. இயக்குனராக 77 நாட்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் அலோக் வர்மா பொறுப்பேற்பு ஏற்றுக் கொண்டார்....

CBI இயக்குனராக அலோக் வர்மா 77 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொறுப்பேற்பு!

சி.பி.ஐ. இயக்குனராக 77 நாட்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் அலோக் வர்மா பொறுப்பேற்பு ஏற்றுக் கொண்டார்....

மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா CBI இயக்குனராக நீடிக்கலாம் என்று கூறி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு மோடி அரசுக்கு விழுந்த மற்றொரு அடியாக கருதப்படுகிறது. 

CBI இயக்குநர்களிடையே நடைபெற்று வந்த பனிப்போர் காரணமாக, CBI இயக்குனர்  பணியியில் இருந்து கட்டாய விடுப்பில் அலோக்வர்மா அனுப்பி வைகப்பட்டார். தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலோக்வர்மா மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி CBI இயக்குநரை கட்டாய  விடுமுறையில் அனுப்பி வைத்த மத்திய அரசின் நடவடிக்கை சரியானது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய புலனாய்வு ஆணையத்தால் (CVC) வழங்கப்பட்ட உத்தரவுகளையும் உச்சநீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து CBI இயக்குநராக அலோக் வர்மா தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் முறைகேடு புகார்களை தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இந்த உத்தரவை நேற்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இதனை அடுத்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கு சென்ற அலோக் வர்மா தனது பொறுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொண்டார்.

முதல் நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை, மீண்டும் பழைய இடங்களுக்கு பணிக்கு அழைக்க அலோக் வர்மா நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

 

Read More