Home> Tamil Nadu
Advertisement

#CauveryIssue: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை!

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை....! 

#CauveryIssue: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை!

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த மனுவை இன்று விசாரணை செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதை தொடர்ந்து,  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விவகாரத்தில் மேலும் மூன்று மாதம் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த இரண்டு மனுக்கையும் ஒன்றாக விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

எனவே, இன்று மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், மத்திய அரசின் மனுவும் ஒரே நேரத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

Read More