Home> India
Advertisement

Budget 2023: நல்ல செய்தி!! KYC செயல்முறை எளிதாகிறது, PAN அட்டைக்கு அதிக முக்கியத்துவம்

Budget 2023: KYC செயல்முறை எளிமையாக்கப்படுவதால், பல தேவையற்ற செயல்முறைகள் நீக்கப்படும். வணிகம் செய்யும் முறைகளை எளிதாக்க பான் அட்டை பொது அடையாளங்காட்டியாக பயன்படும்.

Budget 2023: நல்ல செய்தி!! KYC செயல்முறை எளிதாகிறது, PAN அட்டைக்கு அதிக முக்கியத்துவம்

பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த மத்திய பட்ஜெட் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். ஆகையால், இந்த பட்ஜெட் குறித்து பொது மக்களுக்கும் அனைத்து துறைகளுக்கும் மிக அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட் காகிதமில்லா வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் 2023 உரையை சமர்ப்பிக்கும்  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல பெரிய அறிவிப்புகளை இதுவரை செய்துள்ளார். மேலும் கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) செயல்முறை விரைவில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எளிமைப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார். டிஜிட்டல் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய KYC அமைப்பை முழுமையாகக் கொண்டிருப்பதற்கு நிதி கட்டுப்பாட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

KYC செயல்முறை எளிமையாக்கப்படுவதால், பல தேவையற்ற செயல்முறைகள் நீக்கப்படும். வணிகம் செய்யும் முறைகளை எளிதாக்க பான் அட்டை பொது அடையாளங்காட்டியாக பயன்படும்.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டின் 7 முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டினார் நிதி அமைச்சர்

fallbacks

இது குறித்து அறிவித்த நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன், KYC செயல்முறை எளிமைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாளங்காட்டியாக PAN பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க | Budget 2023: ஏழைகளுக்கு இலவச கேஸ் தொடரும்: பிரதமர் மோடி அரசின் பிளான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More