Home> India
Advertisement

பட்ஜெட் 2022: பட்டைய கிளப்பும் பங்குச் சந்தை

Market Opening : இந்திய பங்குச்சந்தை பட்ஜெட்டை வரவேற்றுள்ளது. இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 632.12 புள்ளிகள் அதிகரித்து, 58,646.29 புள்ளிகளாகவும், நிஃப்டி 135.80 புள்ளிகள் அதிகரித்து, 17,475.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

பட்ஜெட் 2022: பட்டைய கிளப்பும் பங்குச் சந்தை

Market Opening : இந்திய பங்குச்சந்தை பட்ஜெட்டை வரவேற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை தொடக்கத்தில் சென்செக்ஸ் 582.85  புள்ளிகள் அதிகரித்து, 58,597.02 புள்ளிகளாகவும், நிஃப்டி 156.20 புள்ளிகள் அதிகரித்து, 17,496.0 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

பொருளாதார ஆய்வறிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு பங்குச் சந்தை (Share Market) ஏற்றம் பெற்றது மற்றும் கடந்த பல அமர்வுகளாக நிலவும் சரிவிலிருந்து வெளிவந்தது. முன்னதாக திங்கட்கிழமை, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி (Sensex and Nifty) இரண்டும் கொள்முதல் காரணமாக உயர்வுடன் முடிவடைந்தன.

ALSO READ | Union Budget 2022 Live: மத்திய பட்ஜெட் 2022 இன்று, முக்கிய தகவல்கள் இதோ

சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது
திங்களன்று, சென்செக்ஸ் 813 புள்ளிகள் உயர்ந்து 58,014.17 புள்ளிகளில் முடிந்தது. மறுபுறம், நிஃப்டி 237 புள்ளிகள் அதிகரித்து 17,339 ஐ எட்டியது. 

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐடிசி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

நிஃப்டி குறியீடு 
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பிரிட்டானியா, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.பி.சி.எல் , டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல், ஐஓசி, அதுல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

10 ஆண்டு சாதனை
கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட்டுக்கு (Union Budget 2022) முன் பங்குச்சந்தை ஏற்றம் கண்டது இதுவே முதல்முறை. முந்தைய புள்ளிவிவரங்களைப் பார்த்தால், பொது பட்ஜெட்டுக்கு முன், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனையால் சந்தையில் ஒரு சரிவு இருந்தது. ஆனால் இம்முறை சந்தையில் நல்ல ஏற்றம் காணப்பட்டு வருகிறது. 

ALSO READ | Budget 2022: எதிர்பார்ப்புகளும்.. மத்திய அரசின் திட்டமும்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More