Home> India
Advertisement

ட்விட்டரில் #BoycottNetflix ட்ரெண்டிங் ஆகி வரும் காரணம் என்ன..!!!

ட்விட்டர் பயனர்கள் #BoycottNetflix  என ட்ரெண்டிங் செய்து, நெட்ஃபிளிக்ஸ் மீது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். 

ட்விட்டரில் #BoycottNetflix ட்ரெண்டிங் ஆகி வரும் காரணம் என்ன..!!!

புதுடெல்லி: கோயில் வளாகத்தில் காதலர்கள் இடையே முத்தக் காட்சிகளைக் காண்பித்தது தொடர்பாக நெட்ஃபிக்ஸ் மீண்டும் இந்து எதிர்ப்பு உள்ள உள்ளடக்கத்தைக் காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை அடுத்து, #BoycottNetflix ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

ட்விட்டர் பயனர்கள் #BoycottNetflix  என ட்ரெண்டிங் செய்து, நெட்ஃபிளிக்ஸ் மீது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். சிலர் நெட்ஃபிக்ஸ் மீதான கட்டுபாட்டை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோருகின்றனர்.சிலர் நெட்ஃபிளிக்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். சிலர் நெட்ஃபிக்ஸ் தடை செய்யப்பட வேண்டும் என்கிறார்கள்.

இதற்கிடையில், பாஜக (BJP)  இளைஞர் அணியின் தேசிய அமைச்சர் கவுரவ் திவாரி, மத்திய பிரதேச காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் தயாரிப்பாளர் நெட்ஃபிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கவுரவ் சனிக்கிழமை, ரேவாவின் எஸ்எஸ்பியிடம் புகார் கடிதம் கொடுத்தார். நெட்ஃபிக்ஸ் நிர்வாகிகள் மோனிகா ஷெர்கில் மற்றும் அம்பிகா குரானா மீது வழக்கு தொடர வேண்டும் என்று அவர் கோரினார்.

பா.ஜ.க தலைவர் கவுரவ் திவாரி, OTT தளத்தில் இருந்து வீடியோ அகற்றப்படாவிட்டால்,  தெருக்களில் போராட்டன் நடத்தப்படும் என்று கூறினார். இந்த வெப் சீரிஸ் விக்ரம் சேத் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை நெட்ஃபிக்ஸ் தயாரித்ததுள்ளது. நிகழ்ச்சியின் இரண்டாவது அத்தியாயத்தில், ஒரு இந்து பெண், ஒரு முஸ்லீம் பையனை முத்தமிடும் காட்சி காட்டப்பட்டுள்ளது. இந்த முத்த காட்சி மத்திய பிரதேசத்தின் மகேஸ்வர் படித்துறையில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் காட்டப்பட்டுள்ளது.

இது இந்து உணர்வுகளை புண்படுத்தும் மற்றும் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வெட்கக்கேடான முயற்சி, இது இந்து சமூகம் பொறுத்துக் கொள்ளாது. மகேஸ்வர் படித்துறையில், கற்காலத்தின் எண்ணற்ற சிவலிங்கங்கள் உள்ளன. ராணி அகிலியாபாய் ஹோல்கரின் ஆட்சிக் காலத்தில் இது இன்னும் தெய்வீக வடிவத்தைப் பெற்றது. மகேஸ்வர் படித்துறையில் முத்தக் காட்சியைக் காண்பிப்பது, அத்தகைய சிறந்த ஆட்சியாளரின் கர்மபூமி மற்றும் இந்து நம்பிக்கையின் சின்னத்தை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சதி முயற்சி என அவர் மேலும் கூறினார். 

ALSO READ | தண்ணீரில் கண்டம் என கணித்த டாக்டர்கள்.... தவிக்கும் இளம் பெண்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More