Home> India
Advertisement

நிதிஷ்குமார் மற்றும் சரத்யாதவிற்கு இடையே மோதல்?

நிதிஷ்குமார் மற்றும் சரத்யாதவிற்கு இடையே மோதல்?

சரத் யாதவிற்கு பாஜகவுடனான கூட்டணியை ஏற்கவில்லை என்றால் காட்சியில் இருந்து வெளியேறலாம் எனவும், நீங்கள் விரும்பும் கூட்டணிக்கு செல்லலாம் என பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஷ்வி யாதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி,  ஜே.டி.யு. மற்றும் ஆர்.ஜே.டி இடையே இருந்த பெரும் கூட்டணியை கலைத்தார். கூட்டணியை கலைத்த சில மணி நேரத்திற்குள் நிதீஷ் பழைய கூட்டாளியான பி.ஜே.பி உடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்றார்.

நிதிஷ்குமாரின் இந்த செயல் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் பி.ஜே.பி உடன் கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்தார். 

இதனால் கோபமடைந்த நிதிஷ்குமார், பாஜகவுடனான கூட்டணியில் ஆட்சேபம் இருந்தால், சரத் யாதவ் கட்சியில் இருந்து வெளியேறலாம் எனவும், அவர் விரும்பும் கூட்டணிக்கு செல்வதற்கு அவருக்கு சுதந்திரம் உள்ளது என பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More