Home> India
Advertisement

கொரோனா காலத்து தீபாவளியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்கத் தடை!!

பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின் நலனுக்காக நவம்பர் 7-30 முதல் பட்டாசு பயன்படுத்துவதை தடை செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொரோனா காலத்து தீபாவளியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்கத் தடை!!

பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின் நலனுக்காக நவம்பர் 7-30 முதல் பட்டாசு பயன்படுத்துவதை தடை செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய ஒரு நாள் கழித்து, பல மாநிலங்கள் இது தொடர்பாக உத்தரவை வெளியிட்டுள்ளன. ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவிலிருந்து வங்காளம் மற்றும் ஹரியானா வரை - மாநிலங்கள் மாசு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை மனதில் வைத்து பட்டாசு பயன்படுத்துவதை தடை செய்வதை கட்டாயமாக்கியுள்ளன.

எனினும், தீபாவளியில் பட்டாசுகளுக்கான தடை குறித்து தமிழக அரசு இன்னும் எந்த தகவலையும் அளிக்கவில்லை. பல மாநிலங்கள் இந்த தடையைக் கொண்டு வந்தால், தமிழக அரசும் இது குறித்து பரிசீலிக்கத் துவங்கும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் சுற்றுச்சூழல் நிலையைப் பொறுத்து, சுகாதார நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்படும்.   

ராஜஸ்தான்

கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட நெருக்கடியை அடுத்து மாநிலத்தில் பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. "இந்த சவாலான நேரத்தில் மக்களின் உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது" என்று முதல்வர் அசோக் கெஹ்லோட் கூறியுள்ளார்.

 டெல்லி

பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நலன்களுக்காக இந்த தீபாவளிக்கு முடிந்தவரை பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை டெல்லி மக்களை வலியுறுத்தினார்.

டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு (DPCC), அனைத்து மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டுகள் மற்றும் தில்லி காவல்துறையினர் “பச்சை” பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ALSO READ: COVID Impact: இந்த மாநிலத்தில் தீபாவளி பட்டாசு விற்பனைக்குத் தடை!!

ஹரியானா

இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை (Firecrackers) வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரியது என்று ஹரியானா அரசு திங்களன்று அறிவித்தது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களின் துணை ஆணையர்கள் விழிப்புடன் இருக்கவும், இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா

நவம்பர் 10 முதல் 30 வரை பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒடிசா அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது. "COVID-19 தொற்று நிலைமை மற்றும் குளிர்காலம் நெருங்கும் போது பட்டாசுகளை எரிப்பதால் ஏற்படக்கூடிய தீங்கு விளைவிக்கும் விளைவுகளை கருத்தில் கொண்டு, நவம்பர் 10 முதல் 30 வரை பட்டாசுகளை விற்பனை செய்வதையும் பயன்படுத்துவதையும் மாநில அரசு தடை செய்கிறது" என்று மாநில அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம்

தீபாவளி, காளி பூஜையின் போது பட்டாசுகள் வெடிக்க அனுமதி கிடையாது என்று மேற்கு வங்க அரசு உறுதியளித்தது.

"மேற்கு வங்க அரசு காளி பூஜை மற்றும் தீபாவளியின்போது பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்காது. மேலும் அவை கோவிட் -19 நோயாளிகளுக்கு அபாயகரமானவை" என்று தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் புதிய உத்தரவில் தெரிவித்தார்.

பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின் நலனுக்காக நவம்பர் 7-30 முதல் பட்டாசு பயன்படுத்த தடை விதிக்கப்படலாமா என்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் நான்கு மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: இந்த தீபாவளிக்கு தாராளமாக ஷாப்பிங் செயலாம்.... 'கிரெடிட் ஷாப்பில்' 100% கேஷ்பேக்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More