Home> India
Advertisement

ஆகஸ்ட் 19 News Tidbits:இன்றைய சில முக்கியமான செய்திகள்

இந்த நாள் நல்ல நாளாக இருந்ததா? தெரிந்துக் கொள்ளுங்கள் இன்றைய தலைப்புச் செய்திகளின் செய்திச்சுருக்கத்தில் இருந்து...  

ஆகஸ்ட் 19  News Tidbits:இன்றைய சில முக்கியமான செய்திகள்

புதுடெல்லி: லடாக்கிற்கு புதிய சாலை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை.  வாகனங்கள் செல்ல ஏற்பாடுகள் தொடக்கம்...
2020-21ஆம் ஆண்டுக்கான கரும்புப் பருவத்தில் சர்க்கரை ஆலைகள், கரும்புக்கு அளிக்கவேண்டிய நியாயமான லாபகரமான விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்...
பொது தகுதித் தேர்வு நடத்துவதற்கு தேசிய ஆள்தேர்வு முகமை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
டிஜிட்டல் இந்தியாவிற்கு மாபெரும் வெற்றி: சுகாதார அமைச்சகத்தின் சஞ்சீவனி தொலைபேசி மருத்துவச் சேவை மூலம் இரண்டு லட்சம் தொலைபேசி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன...
கொப்பரைத் தேங்காய் விலையை 125 ரூபாயாக உயர்த்த தமிழக முதலமைச்சர், மத்திய அரசிடம் கோரிக்கை...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 லட்சத்து பத்தாயிரத்தைத் தாண்டியது...

Read Also | இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் INS Vikrantஇன் சிறப்பம்சங்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையும் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்கிறார் மாநில கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...
தமிழகத்தில் 5,795 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது...
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் நாளை அவருக்காக கூட்டுப் பிரார்தனை செய்ய அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் இசையமைப்பாளர் இளையராஜா...
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களை தனிமைப்படுத்துவதில் அதிக கவனம் – தமிழக அரசு...
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்கிறது வேதாந்தா...
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் தொடக்கம்...
சீனா கொரோனா தடுப்பு மருந்தை 10,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பிருப்பதாகத் தகவல்...

Read More