Home> India
Advertisement

ஜின்னாவின் புதிய அவதாரம் தான் ஒவைசி: தேஜஸ்வி சூர்யா

பாஜகவை சேர்ந்த தலைவரான தேஜஸ்வி சூர்யா, ஓவைசி ‘ஜின்னாவின் புதிய அவதாரம்’ என்றும்,  AIMIM க்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும்  இந்தியாவுக்கு எதிரான வாக்கு என குறிப்பிட்டார்

ஜின்னாவின் புதிய அவதாரம் தான் ஒவைசி: தேஜஸ்வி சூர்யா

புதுடெல்லி: பாகிஸ்தானின் காயிதே-அஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் புதிய “அவதாரம்” என்று அசாதுதீன் ஒவைசியைக் குறிப்பிட்டு, பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, AIMIM  தலைவருக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவிற்கு எதிரான வாக்கு என்றார். ஒவைசி "பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம்" என்ற மொழியில் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார், இது ஜின்னாவால் பயன்படுத்தப்பட்ட மொழி என்றும் அவர் கூறினார்.

“அக்பருதீனும் அசாதுதீன் ஒவைசியும் (Asaduddin Owaisi) வளர்ச்சியைப் பற்றி பேசுவது நகைப்பாக உள்ளது. பழைய ஹைதராபாத்தில் அவர்கள் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை, அவர்கள் அனுமதித்த ஒரே விஷயம் ரோஹிங்கியா முஸ்லிம்கள். ஒவைசிக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளும் இந்தியாவுக்கு எதிரான வாக்கு,”என்று அவர் கூறினார்.

வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டும் என தெலுங்கானா (Telengana) மக்களை வற்புறுத்திய பாஜக தலைவர், பாஜக நாட்டில் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்தது எனக் கூறினார். "காஷ்மீரில், உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் மக்களால் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என அவர் குறிப்பிட்டார்.
 
டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள கிரேட்டர் ஹைதராபாத் (Hyderabad) மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக அவரது இந்த கருத்துக்கள் வெளி வந்துள்ளன. டிசம்பர் 4 ம் தேதி வாக்குகளை எண்ணிய பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதற்கிடையில், ஹைதராபாத் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் பாஜக மட்டுமே இதை சாத்தியமாக்க முடியும் என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி கூறினார்.

ALSO READ | வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டம்  சொல்வது என்ன... இந்து வாக்கு வங்கி உருவாகிறதா..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More