Home> India
Advertisement

வெள்ளைக் கொடியுடன் வந்து BAT அமைப்பினர் உடல்களை எடுத்துச் செல்லுங்கள்!

இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கேரனில் ஊடுருவ முயன்ற BAT அமைப்பினர் 7 பேரின் உடல்களை எடுத்துச்செல்ல பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல்!!

வெள்ளைக் கொடியுடன் வந்து BAT அமைப்பினர் உடல்களை எடுத்துச் செல்லுங்கள்!

இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கேரனில் ஊடுருவ முயன்ற BAT அமைப்பினர் 7 பேரின் உடல்களை எடுத்துச்செல்ல பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல்!!

காஷ்மீர்: கேரனில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் ராணுவத்தின் BAT அமைப்பினர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்நிலையில் 7 பேரின் உடல்களை எடுத்து செல்ல இந்திய ராணுவம் அனுமதியளித்துள்ளது. மேலும், வெள்ளை கொடியுடன் வருமாறும் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கூறியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த BAT (பாக்கிஸ்தானின் பார்டர் ஆக்சன் டீம்) என்ற குழுவை பாகிஸ்தான் அமைத்துள்ளது.

ஆனால், இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. ஜூலை 31 அன்று கொல்லப்பட்ட BAT பணியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் உடல்களை எடுத்துச் செல்லுமாறு இந்திய ராணுவம் அண்டை நாட்டைக் கேட்டுள்ளது. ஆனால், இந்திய இராணுவத்தின் சலுகைக்கு பாகிஸ்தானில் அதிகாரிகள் இன்னும் பதிலளிக்கவில்லை.

குப்வாரா மாவட்டம் கேரன் செக்டாரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன் தினம் முதல் தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 36 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த தாக்குதலில் 5 முதல் 7 தீவிவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதுடன் பாகிஸ்தான் ராணுவத்தின் ரோந்து பணி காரணமாக அந்த சடலங்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு படையை (BAT - Border Action Team) சேர்ந்தவர்கள் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. இந்த படையில் தீவிரவாதிகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் சடலங்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் செல்லுமாறு இந்திய ராணுவம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு முன்பு இதேபோல் இந்திய ராணுவம் அழைத்த போதெல்லாம் பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொண்டது இல்லை. அதேபோல்தான் இப்போதும் நடக்கும். அப்போதெல்லாம் பாகிஸ்தான் வீரர்களின் உடல்கள் இந்திய மண்ணில் புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Read More