Home> India
Advertisement

ஆர்கே நகர் இடைதேர்தல்; டில்லி ஐகோர்ட் மறுப்பு!!

நாளை நடக்க உள்ள ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க டில்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.  

ஆர்கே நகர் இடைதேர்தல்; டில்லி ஐகோர்ட் மறுப்பு!!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கோவையை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் கூறப்படிருந்தது, சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது சரியாக அமையவில்லை என்பதால் கடந்த முறை தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. நிலைமை சீரான பின்பே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்திருந்தது. 

ஆனால்,தற்போதும் நிலைமை சரியாக அமையவில்லை. கடந்த முறை போட்டியிட்ட அதே வேட்பாளர்கள்தான் தற்போதும் போட்டியிடுகிறார்கள். என்பதால்  இடைத்தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும். 

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக கடந்த முறை 35 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். அந்த வழக்குகளை மாநில போலீசார் விசாரித்தால் முறையாக இருக்காது என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும்.

மேலும், தேர்தலை நடத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என்பதற்கு நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரித்ததே இதற்கு சிறந்த உதாரணம் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

தற்போது இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், ஆர்கே நகர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

 

Read More