Home> India
Advertisement

வங்கி ஊழல்கள் தொடர்பாக அன்னா ஹசாரே கருத்து!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் , ரோட்டோமேக் ஊழல் தொடர்பாக அன்னா ஹசாரே தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

வங்கி ஊழல்கள் தொடர்பாக அன்னா ஹசாரே கருத்து!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் வழக்கு ஓய்வதற்குள, ரோட்டோமேக் ஊழல் தலைதூக்கி விட்டது. இந்த இரு விவகாரங்கள் தொடர்பாகவும் நிரவ் மோடி மற்றும் விக்ரம் கோத்தாரி ஆகியாரின் சொத்துக்கள் கடும் சோதனையில் மாட்டியுள்ளன.

நாடுமுழுவதும் இந்த இரு விவகாரங்கள் குறித்தே பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அன்னா ஹசாரே தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது...

"லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை மக்கள் விரும்பாததாலே இவ்வாறான முறைகேடுகள் நடைப்பெற்றுள்ளது. இவை மிகவும் சக்தி வாய்ந்தவையா நாங்கள் வரைவு செய்தோம் ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 

2011-ம் ஆண்டு லோக்பால் மற்றும்  லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தி இருந்தால் இது போன்ற பல மோசடிகள் நடந்திருக்காது. மத்தியஅரசு ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறுகிறார்கள், ஆனால் அதற்கான வழிமுறைகளை மட்டும் அவர்கள் பின்பற்ற மறுக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்!

Read More