Home> India
Advertisement

அனில் அம்பானியின் BigFM-யை வாங்கும் முயற்சியில் RadioCity!

Big FM பன்பலை நிறுவனத்தை ஜார்கன்ஸ் மியூசிக் ப்ராட்காஸ்ட் நிறுவனத்திடம் 1,050 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அனில் அம்பானி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனில் அம்பானியின் BigFM-யை வாங்கும் முயற்சியில் RadioCity!

Big FM பன்பலை நிறுவனத்தை ஜார்கன்ஸ் மியூசிக் ப்ராட்காஸ்ட் நிறுவனத்திடம் 1,050 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அனில் அம்பானி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெர்வொர்க் நிறுவன கட்டுப்பாடின் கீழ் இயங்கி வரும் Big FM பன்பலைக்கு இந்தியாவில் 58 வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன. 

இந்நிலையில் Big FM நிறுவனத்தை 1,050 கோடி ரூபாய்க்கு தொழிலதிபர் ஜக்ரான் பிரகாசனின் கட்டுப்பாட்டில் இயங்கும் மியூசிக் பிராட்காஸ்ட் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. மியூசிக் பிராட்காஸ்ட்டின் கீழ் ‘ரேடியோ சிட்டி’ என்ற பிராண்டில் செயல்படும் பன்பலை நிறுவனம் இயங்கி வருகிறது. 

ரேடியோ சிட்டி நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 39 பன்பலை நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் Big FM-ன் 40 வானொலி நிலையங்களை தற்போது ரேடியோ சிட்டி நிறுவனம் விலைக்கு வாங்க முன்வந்துள்ளது.

முதலில் Big FM நிறுவனத்தின் 202 கோடி ரூபாய் மதிப்புள்ள 24% பங்கை மியூசிக் பிராட்காஸ்ட் நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது. பின்னர் படிப்படியாக இதர பங்குகளையும் அந்நிறுவனம் வாங்க இருக்கிறது.

இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு மூலம் பன்பலை நிலையங்களின் எண்ணிக்கை 78-ஆக உயரும், இதன் மூலம் இந்தியாவின் நம்பர்-1 பன்பலையாக ரேடியோ சிட்டி மாற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தை பொறுத்தவரையில் Big FM சென்னை மற்றும் புதுச்சேரியில் இயங்கி வருகிறது. ரேடியோ சிட்டி பன்பலை சென்னை, கோவை மற்றும் மதுரையில் இயங்கி வருகிறது. 

Read More