Home> India
Advertisement

நிதி நெருக்கடியில் அனில் அம்பானி; தலைமை அலுவலகத்தை விற்க முடிவு!

தன் நிறுவனத்தின் கடன் தொகையை குறைப்பதற்காக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடிவு செய்துள்ளார் தொழிலதிபர் அனில் அம்பானி!

நிதி நெருக்கடியில் அனில் அம்பானி; தலைமை அலுவலகத்தை விற்க முடிவு!

தன் நிறுவனத்தின் கடன் தொகையை குறைப்பதற்காக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடிவு செய்துள்ளார் தொழிலதிபர் அனில் அம்பானி!

கடந்த 2005-ஆம் ஆண்டு அம்பானி சகோதரர்களுக்கு இடையே முரண்பாடுகளை அடுத்து, முகேஷ் அம்பானியிடம் இருந்து சொத்துக்களை பிரித்த அனில் அம்பானி அப்போது பெற்ற தெற்கு மும்பையில் உள்ள பல்லார்டு எஸ்டேட்டிற்கு தனது அலுவலகத்தை மாற்ற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். 

சில நாட்களாக கடுமையான கடன் சுமையில் சிக்கி தவித்து வரும் அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தை கடனில் இருந்து காப்பாற்றுவதற்காக 700,000 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள அலுவலகத்தை விற்க அல்லது நீண்டகால குத்தகைக்கு விட முன்வந்துள்ளதாக தெரிகிறது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்கள் நிறுவனத்தை நடத்துவதற்காக கடன் பெற்ற அனில் அம்பானி, கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை கடந்த சில தினங்களா சந்தித்து வருகின்றார். முன்னதாக கடன் தொகை விவகாரம் தொடர்பாக எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், கடன் தொகையை திருப்பி அளிக்காவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டும் என அனில் அம்பானிக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

சமீபத்தில் அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெர்வொர்க் நிறுவன கட்டுப்பாடின் கீழ் இயங்கி வரும் Big FM பன்பலையினை விற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

Big FM பன்பலைக்கு இந்தியாவில் 58 வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் Big FM நிறுவனத்தை 1,050 கோடி ரூபாய்க்கு தொழிலதிபர் ஜக்ரான் பிரகாசனின் கட்டுப்பாட்டில் இயங்கும் மியூசிக் பிராட்காஸ்ட் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. மியூசிக் பிராட்காஸ்ட்டின் கீழ் ‘ரேடியோ சிட்டி’ என்ற பிராண்டில் செயல்படும் பன்பலை நிறுவனம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More