Home> India
Advertisement

ஆந்திரா கல்குவாரி வெடிவிபத்து- 11 பலி, ரூ.5 லட்சம் நிவாரணம்!

ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் என்ற மாவட்டத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த குவாரியில், சுமார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த திடீரென வெடி விபத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

அதிக அளவிலான டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தியதே வெடி விபத்திற்கு காரணம் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் பேசியிருக்கிறேன். காயம் அடைந்தவர்களுக்கான உரிய சிகிச்சை உறுதி செய்யப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என்றார்.

Read More