Home> Social
Advertisement

டிவிட்டரில் டிரென்ட் ஆகும் அமித்ஷா_உளறல்கள் ஹேஷ்டேக்!

பாஜக கட்சியின் கர்நாடகா மாநில முதலவர் வேட்பாளரான எடியூரப்பா மிகப் பெரிய ஊழல்வாதி என பாஜக கட்சி தலைவர் அமித் ஷா வாய் தவறி கூறிய காட்சி சமூக வளைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது. 

கர்நாடக மாநிலம் தாவான் கிரியில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அமித் ஷா, சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மிகவும் ஊழல் மலிந்த அரசுக்கான போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுதான் முதலிடத்தில் இருக்கும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார். அமித் ஷா இதை கூறும்போது எடியூரப்பா அவர் அருகிலேயே அமர்ந்திருந்தார். மற்றொரு தலைவர் அவர் காதுகளில் கிசுகிசுத்தவுடன் அமித் ஷா தன்னை திருத்திக்கொண்டார். இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர்கள் வைரலாகி பரப்பி வருகிறனர். 

இதனிடையே, #அமித்ஷா_உளறல்கள் என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

Read More