Home> India
Advertisement

அடுத்து ஆர்பிஐ கவர்னர் யார்? இன்று அறிவிக்கப்படும்: மத்திய நிதியமைச்சகம்

இன்று அடுத்த ஆர்பிஐ கவர்னர் யார் என்று அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்து ஆர்பிஐ கவர்னர் யார்? இன்று அறிவிக்கப்படும்: மத்திய நிதியமைச்சகம்

மத்திய அரசு ரிசர்வ் வங்கிடம் சில கோரிக்கைகளை வைத்தது. அதாவது வராகடன் பிரச்னையில் சிக்கி தவித்து வரும் வங்கிகளிடம் காட்டப்பட்டு வரும் கெடுபிடியை ரிசர்வ் வங்கி தளர்த்த வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உள்ள பல லட்சம் கோடி ரூபாயை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியது. இதனையடுத்து மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிதி விவகாரத்தில் மோதல் வலுத்துள்ளது என தகவல்கள் வெளியாகின. கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரல் ஆசாரியா அவர்கள் "ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிக்காத அரசுகள், மிக விரைவில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்" என விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்தால் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

கடந்த ஒருமாதமாக உர்ஜித் படேல் தனது பதிவியினை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. நேற்று திடீரெனே இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஊர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

உர்ஜீத் படேல் தனது ராஜினாமாவை அளித்து அனைவருக்கும் அதிர்ச்சியுற்றிருக்கிறார். இந்த விஷயத்தில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், அடுத்து என்ன செய்ய போகிறார்கள் மற்றும் ஆர்.பி.ஐ.யின் புதிய கவர்னர் யார்? போன்ற கேள்விகள் எழுகின்றன.

உர்ஜீத் பட்டேல் பதவி விலகியதால், புதிய கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சில தினங்கள் தேவைப்படும் என்று அனைவரும் அறிவர். இதன் அர்த்தம் யாராவது இடைக்கால கவர்னராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவீஸ் குமார், சுர்ஜித் பல்லா, அஷ்முக், ராஜீவ் மகர்ஷி, விஸ்வநாத் மற்றும் சக்திகாந்த் தாஸ் போன்றோரின் பெயர்கள் முன்னிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், இன்று ரிசர்வ் வங்கிக்கு புதிய கவர்னர் அல்லது இடைக்கால கவர்னர் நியமிக்கப்படுவார் என நிதி செயலாளர் ஏ.என். ஜா தெரிவித்துள்ளார்.

Read More