Home> India
Advertisement

கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-வை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் அமோக வெற்றி!!

கர்நாடகாவில் 61 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-வை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் அமோக வெற்றி!!

பெங்களூரு: கர்நாடகாவில் 61 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த மே 29 ஆம் தேதி கர்நாடகாவில் 61 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1221 வார்டுகள் என 20 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 31) நடைபெற்றது. அதில் 509 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. ம.ஜ.த 174 இடங்களையும், பாஜக 366 இடங்களையும், சுயேட்சைகள் 160 இடங்களையும் கைப்பற்றின. 

கடந்த மாதம் ஏப்ரல் 18 ஆம் தேஹ்டிதேதி கர்நாடக மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெற்றது. அதில் பாஜக 25 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த, தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. மற்றொரு இடத்தில் சுயேச்சை வெற்றி பெற்றார். 

இதனை தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஆனால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் பெரு வாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இருவரும் உள்ளாட்சித் தேர்தலை தனித் தனியே சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேர் எதிர்மறையான முடிவுகளை கொடுத்துள்ளது என்பது இங்க கவனிக்க வேண்டி உள்ளது.

Read More