Home> India
Advertisement

ஹரியானாவை தொடர்ந்து உத்திராகண்ட் விவசாயிகளும் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு

அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை  ரத்து செய்யக் கோரி  உத்தரபிரதேசம், பஞ்சாப் (punjab), ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 18வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹரியானாவை தொடர்ந்து உத்திராகண்ட்  விவசாயிகளும் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு

அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை  ரத்து செய்யக் கோரி  உத்தரபிரதேசம், பஞ்சாப் (punjab), ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 18வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் கடந்த 27ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை (Delhi) ஒட்டியுள்ள பிற மாநிலப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று ஹரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து பண்ணை சட்டங்களை ஆதரித்துள்ளனர்.  இருப்பினும் விவசாயிகள் ஏபிஎம்சி (APMC) மற்றும் எம்எஸ்பி (MSP) முறையை தொடர வேண்டும் என்று கோரியுள்ளனர். சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றாலும், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்பதால் ரத்து செய்யக்கூடாது என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து, இன்று புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்த உத்தரகண்ட் (uttarakhand) விவசாயிகளின் பிரதிநிதிகள் குழுவுக்கு மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நன்றி தெரிவித்தார்.

ஒருபுறம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் தூதுக்குழு இந்த சட்டங்களுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது. தூதுக்குழு ஞாயிற்றுக்கிழமை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு முழு ஆதரவை தெரிவித்ததோடு, இவை விவசாயிகள் நலனுக்கானவை என கூறின.

ALSO READ | வேளாண் சட்டத்தை ஆதரித்து ஹரியானா விவசாயிகள் வேளாண் அமைச்சரிடம் கடிதம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More