Home> India
Advertisement

ஆதார் எண் இணைப்பு கட்டாயம் - உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 

ஆதார் எண் இணைப்பு கட்டாயம் - உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 

இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்க போவதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதி கூறியது, ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க பொது மக்களை கட்டாயப்படுத்த கூடாது எனவும், வங்கிகணக்கு தொடங்க ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கக்கூடாது எனவும் கூறி அரசின் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் உத்தரவுக்கு அரசியல் சாசன அமர்வு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது. 

Read More