Home> India
Advertisement

நிதீஷ்குமார் முதல்வரான பின் விரலை வெட்டி காணிக்கையாக்கிய தொண்டர்..!!!

தலைவர்களுக்கு நடிகரிகளுக்கு, சில தீவிர தொண்டர்கள் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு இருப்பது ஒரு வெறி எனக் கூறலாம். 

நிதீஷ்குமார் முதல்வரான பின் விரலை வெட்டி காணிக்கையாக்கிய தொண்டர்..!!!

தலைவர்களுக்கு நடிகர்களுக்கு, சில தீவிர தொண்டர்கள் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு இருப்பது ஒரு வெறி எனக் கூறலாம். இவர்கள் தங்கள் குடும்பத்திற்காக, தன்னை சார்ந்தவர்களுக்காக ஒன்றும் செய்யாதவர்கள். ஆனால், தலைவர்களுக்கு என்றால் எதுவும் செய்ய தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு தீவிர தொண்டர் ரசிகர் நிதிஷ் குமாருக்கும் இருக்கிறார்.

ஆம், நிதீஷ் குமார் (Nitish Kumar) மீண்டும் முதல்வரான பிறகு, பீகார் ஜெஹனாபாத்தில் வசித்து வரும் அனில் சர்மா என்ற நபர் தனது நான்காவது விரலை வெட்டி இறைவனுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். இதற்கு முன், அனில் தனது மூன்று விரல்களை, இதே காரணத்திற்காக வெட்டி காணிக்கையாக்கியுள்ளார்.

இப்போது நிதீஷ் குமார் நான்காவது முறையாக முதல்வரானபோது, ​​அனில் தனது நான்காவது விரலை வெட்டி காணிக்கையாக கோரையா பாபாவின் கோவிலுக்கு வழங்கினார். 

இந்த சம்பவம் பிகாரின் ( Bihar) ஜெஹனாபாத் மாவட்டத்தின் கோசி காவல் நிலைய பகுதியின் வைனா கிராமத்தில் நடந்த சம்பவம். அனில் சர்மாவுக்கு 45 வயது, இதற்கு முன் மூன்று முறை விரல்களை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்திருந்தார்.

நவம்பர் 16 ஆம் தேதி, நிதீஷ் குமார் மீண்டும் முதல்வரான பிறகு அனில் தனது நான்காவது விரலை வெட்டி காணிக்கையாக்கினார். 

பீ கார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை (JDU)  சேர்ந்த முதல்வர் நிதீஷ் குமார் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் போதெல்லாம், அனில் சர்மா ஒரு விரலைக் வெட்டி கோராயா பாபாவிடம் காணிக்கையாக அளிக்கிறார்.

அதே சமயம், அனிலின் இந்த நடவடிக்கையால் கிராமத்தில் வசிக்கும் மீதமுள்ள மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இப்படி காணிக்கையாக அளிப்பது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று அனில் கூறுகிறார். இந்த முறையும் நிதீஷ்குமார் முதலமைச்சராக ஆக வேண்டும் என கோரையா பாபாவிடம் அவர் வேண்டிக் கொண்டார், அது நிறைவேறியது. இதற்குப் பிறகு, அனில் சர்மாவும் தனது நான்காவது விரலை வெட்டி காணிக்கையாக இறைவனுக்கு வழங்கினார்.

ALSO READ| வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டம்  சொல்வது என்ன... இந்து வாக்கு வங்கி உருவாகிறதா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More