Home> India
Advertisement

மனநல பாதிப்பால் முடியை சாப்பிடும் வினோத சிறுமி!

முடியை சாப்பிடும் சிறுமியின் வயிற்றை ஆபரேஷன் செய்து வயிற்றில் இருந்த முடியை மருத்துவர்கள் வெளியேற்றினர்  

மனநல பாதிப்பால் முடியை சாப்பிடும் வினோத சிறுமி!

சூரத்: குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் காட் டாட் எனும் சாலை பகுதியில் 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். தந்தை ஓர் ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தற்போது 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த சிறுமி, கடந்த சில நாட்களாக சரிவர உணவு உண்ணவில்லை. உணவு சரிவர உண்ணாமையால் இவரது உடல் எடை வேகமாக குறைந்துள்ளது. சிறுமியின் உடலில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பின்னர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.பரிசோதனையில் தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த சிறுமியின் வயிற்றில் முடி உருண்டை இருப்பதை கண்டனர். மேலும் இந்த முடி உருண்டையினை அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.  தனியார் மருத்துவமனை என்பதால் அறுவை சிகிச்சை செய்ய அதிக செலவாகும என்பதால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை நியு சிவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர் அங்கு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக சிறுமியின் வயிற்றில் இருந்த முடி உருண்டை அகற்றப்பட்டு விட்டது. 

fallbacks

இதுகுறித்து சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகையில்,".நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காரணத்தால் தான் இந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிறுமி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக இந்த சிறுமிக்கு முடியை சாப்பிடும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்த சிறுமி மன அழுத்தத்தில் இருக்கும்பொழுது தலையிலுள்ள முடியை பிய்த்து திம்பாராம், சீப்பில் முடி இருந்தாலும் கூட அதையும் சேமித்து வைத்து சாப்பிடுவாராம். இந்த அரியவகை குறைப்பாட்டிற்கு 'ட்ரைக்கோபெசோவர்' என்று பெயர். 

fallbacks

முதல் சிகிச்சையின் பொழுதே அந்த சிறுமிக்கு மனநல சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டதால் ,மீண்டும் முடியை சாப்பிட தொடங்கியுள்ளார்.அப்போதே அதற்கும் சேர்த்து சிகிச்சை அளித்திருந்தால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.  அதன் காரணமாகவே இப்போது இந்த சிறுமிக்கு மன நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் முழு சிகிச்சைக்கு பின்னர் தான் எதனால் இவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்து தெரிய வரும்" என்று கூறினார்.

ALSO READ ஸ்மார்ட் போனுக்காக மனைவியை விற்ற கொடூர கணவன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More