Home> India
Advertisement

2 மலையாள தொலைக்காட்சி சேனல்களுக்கு 48 மணிநேர தடை

டெல்லி வன்முறையை மதரீதியாக உணர்ச்சிவசப்படாததாகக் குற்றம் சாட்டப்பட்டதற்காக ஐ & பி அமைச்சகத்தால் நேற்று 48 மணி நேரம் தடைசெய்யப்பட்ட Asianet News மற்றும் MediaOne சேனல்கள் மீண்டும் ஒளிபரப்பப்படுகின்றன.

53 பேர் கொல்லப்பட்ட 'டெல்லி கலவரத்தை' ஒளிபரப்பியதற்காக இரண்டு மலையாள தொலைக்காட்சி சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய் யப்பட்டு இருந்தது. Asianet News மற்றும் MediaOne ஆகியவை வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியிலிருந்து 48 மணி நேரத்திற்கு தடை விதிப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்தது. 

இரண்டு சேனல்களுக்கும் எதிரான நடவடிக்கை கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் விதிகள், 1994 இன் கீழ் எடுக்கப்பட்டது.

Asianet News ஒரு வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதலை மிகைப்படுத்தி காட்டியதாகவும், ஒரு சமுதாயத்திற்கு சாதகமாக செயல்பட்டது போல் தெரிவதாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை கூறியுள்ளது. MediaOne தொலைக்காட்சியின் செய்திகள் சிஏஏ ஆதரவாளர்களின் கலவரத்தின் மீது மட்டுமே கவனத்தை குவிப்பதாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு சேனல்களில் செய்தியாளர்களின் வார்த்தைகள் இரு சமுதாயத்திடையேயான நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இருந்ததாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த இரண்டு சேனல்கள் மீண்டும் ஒளிபரப்பப்படுகின்றன.

Read More