Home> Health
Advertisement

Lungs Healthy Food: நுரையீரல் நலமாக வைத்திருக்க உதவும் சிறந்த உணவுகள்

Lungs Healthy Food Tips: நமது இரத்த ஓட்டத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டு வரவும், கார்பன் டை ஆக்சைடு கழிவுப் பொருட்களை வெளியேற்றவும்  நுரையீரல் அயராது உழைக்கிறது. 

Lungs Healthy Food: நுரையீரல் நலமாக வைத்திருக்க உதவும் சிறந்த உணவுகள்

Lungs Healthy Food in Tamil: இன்றைய பதிவில் நம்முடைய நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்தி நம்முடைய நுரையீரலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம். உணவு பழக்க வழக்கங்கள் சில மாற்றங்களை செய்வதன் மூலமாக நுரையீரல் தீங்கு விளைவிக்க கூடிய மாசுபாட்டில் இருந்து பாதுகாக்க முடியும். இதனால் நமக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கக்கூடிய குழந்தைகளுக்கெல்லாம் மூச்சு திணறல் பிரச்சினை குறைவாக தான் இருக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆப்பிள் பழம் பலவிதமான பிரச்சனைகளை குணப்படுத்தி உங்களை பாதுகாக்கும். எனவே ஆப்பிள் பழத்தை உட்கொள்வதால் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இது நுரையீரல் ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைத்து எளிதில் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் குணமாக வழி வகுக்கும். இது ஒவ்வாமை அலர்ஜியால ஏற்படக்கூடிய ஹிஸ்டமை அறிகுறிகளை குறைப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

கொரியாவில் ஒரு நாளைக்கு இரண்டு கப் கிரீன் டீ அருந்திய ஆயிரம் நபர்களை வைத்து பண்ணிய ஆய்வில் கிரீன் டீ குடிக்காதவர்களை விட கிரீன் டீ குடித்தவர்களின் நுரையீரல் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருப்பதாக 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனே கிரீன் டீ அளவாக எடுத்துக்கொள்வதன் மூலம் உங்களுடைய நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

மத்தி மீன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மீனில் உள்ளல கொழுப்ப அமிலங்கள் உடலில் ஏற்படக்கூடிய நுரையீரல் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் என மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

மேலும் படிக்க - பச்சை தண்னீரில் குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி பக்காவா இருக்குமா? உண்மை என்ன?

நட்ஸ் மற்றும் விதைகள் நுரையீரல் பலம் பெறுவதற்கு எடுத்துக்கொள்ளலாம். விதைகள் நமது நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய மற்றொரு சூப்பர் ஃபுட் எனச் சொல்லலாம். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா மற்றும் பூசணி விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் இது எல்லாமே நம்முடைய உடலுக்கு குறிப்பா நம்முடைய நுரையர்களுக்கு மெக்னீசியன் அளிக்கிறது. இது நமது சுவாச பாதைகளை ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவிகரமாக இருக்கும்.

வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை அடங்கிய வெர்ஜின் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொள்வது மூலம் உங்களுடைய நுரையீரலை ஆக்ஸிஜனேற்றம் அழுத்தத்திலிருந்து பாதுகாப்பதற்கு உதவிகரமாக இருக்கும். எனவே நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உணவில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக்கொள்ளலாம்.

ஆல்ரெடி நுரையீரல் தொற்றுகள்ல பாதிக்கப்பட்டவங்களும் பிரக்கோலி உணவை எடுத்துக்கொள்ளலாம். நுரையீரல் உயிரணுக்களில் காணப்படக்கூடிய மரபணு செயல்பாட்டை அதிகரிக்கிறதுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் நுரையீரலில் காற்று ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் இந்த பிரக்கோலி சிறந்தாக இருக்கும்.

பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன இஞ்சி சாப்பிடுவதால் நுரையீரல் இருக்கக்கூடிய நச்சு தன்மையை நீக்கும். நுரையீரல் காற்று பாதைகளை சீராக்கி நுரையீரலை காற்றோட்டமாக வைத்துக் கொள்வதற்கும் இஞ்சில் இருக்கக்கூடிய சத்துக்கள் உதவும்.

மேலும் படிக்க - தொப்பை கொழுப்பை எரிக்க.... இவற்றுக்கெல்லாம் கண்டிப்பாக நோ சொல்லுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More