Home> Health
Advertisement

பழத்தில் மட்டுமல்ல வாழைப்பழத் தோலிலும் மறைந்திருக்கும் ஆரோக்கியம்! இது

வாழைப்பழத் தோலின் உண்மையான சத்துக்கள் அனைவருக்கும் தெரிந்தால், ஊட்டச்சத்து குறைபாடு என்ற பேச்சே உலகில் இருக்காது...

பழத்தில் மட்டுமல்ல வாழைப்பழத் தோலிலும் மறைந்திருக்கும் ஆரோக்கியம்! இது

வாழைப்பழங்கள் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய பிரபலமான பழங்களில் ஒன்று. உலகில் மிக அதிகமாக சாப்பிடப்படும் வாழைபழத்தில் இருக்கும் நன்மைகள் அதன் தோலிலும் உள்ளன.

ஆனால், வாழைப்பழத் தோலின் உண்மையான சத்துக்கள் யாருக்கும் தெரியாததால் ஆண்டுக்கு பல மில்லியன் தோல்கள் குப்பைக்கு செல்கின்றன. 

வாழைப்பழத் தோலின் உண்மையான சத்துக்கள் அனைவருக்கும் தெரிந்தால், ஊட்டச்சத்து குறைபாடு என்ற பேச்சே உலகில் இருக்காது...

மேற்கத்திய நாடுகளில், பிரபலமான ஊட்டச்சத்து மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வாழைப்பழத் தோல்கள் (Benefit of Eating Banan peel), சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, அவை பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன.

ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!

வாழைப்பழத்தோல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் 
வாழைப்பழங்களைப் போலவே, வாழைப்பழத் தோலும் அதன் வகை மற்றும்  முதிர்ச்சியின் அளவைப் பொறுத்து வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.

வாழைப்பழத் தோலில் பூஞ்சை எதிர்ப்பு கலவை, ஆண்டிபயாடிக், ஃபைபர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும் பிற சத்துக்களும் நிறைந்துள்ளது. எனவே உட்புற தோலில் இருக்கும் வெள்ளை நிறப்பகுதியை நாம் சாப்பிடலாம். 

வாழைப்பழத்தோலின் சில சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள் இங்கே:

மனச்சோர்வு 
வாழைப்பழத்தில் உள்ள அதிக அளவு டிரிப்டோபான், வாழைப்பழத்தோலில் உள்ள B6 உடன் இணைந்து, மனச்சோர்வு மற்றும் பிற மனநிலைக் கோளாறுகளின் சில அறிகுறிகளைப் போக்க உதவும். டிரிப்டோபான் உடைந்து செரோடோனினாக மாறுகிறது, இது மனநிலையை மேம்படுத்தும்.

வைட்டமின் B6 தூக்கத்தை மேம்படுத்த உதவும், இது காலப்போக்கில் மனநிலையில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ALSO READ | தினமும் இந்த நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா

செரிமானம்
நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத் தோல்கள் செரிமான அமைப்பைச் சீராக்க உதவுகிறது, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டையும் எளிதாக்குகிறது. 

கண்பார்வை
வைட்டமின் ஏ உயிர்ச்சத்து, கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த வைட்டமின் சத்தானது வாழைப்பழம் மற்றும் வாழைப்பழத் தோல்கள் இரண்டிலும் ஏராளமாக உள்ளது.

சருமப் பிரச்சனைகள்
வாழைப்பழ தோல்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தவை, அவை அனைத்து வகையான அழற்சிகளையும் போக்க உதவுபவை. வாழைப்பழத்தின் தோல், சருமப் பிரச்சனைகள், தோல் தடிப்பு, தோல் அழற்சி, அரிப்பு என பல்வேறு பிரச்சனைகளை போக்க வல்லது.

ALSO READ | நோய்களுக்கு வேம்பாகும் வெந்தயம்!

வாழைப்பழ தோலை தினமும் பற்களில் தேய்த்து வந்தால் மஞ்சள் கரை நீங்கும், பல் ஆரோக்கியமும் மேம்படும்.

வாழைப்பழத் தோல்களில், பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகள் நிரம்பியுள்ளன, அவை உடலில் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. 

வாழைப்பழத் தோல்களை அதிகம் சாப்பிடுவது, குறிப்பாக பச்சை, பழுக்காத தோல்கள், உங்கள் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கலாம் என்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இதைப்பற்றி மருத்துவ ரீதியாக நிரூபிக்கும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More