Home> Health
Advertisement

இளம்பெண் உடலை பதம் பார்த்த மருத்துவர்கள் மீது குற்றவழக்கு பதிவு!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதாக கூறி இளம்பெணின் தொடையினை சிதைத்த ரஸ்ய மருத்துவர்கள் மீது குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்!

இளம்பெண் உடலை பதம் பார்த்த மருத்துவர்கள் மீது குற்றவழக்கு பதிவு!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதாக கூறி இளம்பெணின் தொடையினை சிதைத்த ரஸ்ய மருத்துவர்கள் மீது குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்!

ரஸ்யாவை சேர்ந்த 40-வயது இளம்பெண் Veleslava Grigorieva. தனது மார்பகத்தினை அழகாக்க விரும்பி எட்டிஸ்பர்கின் நுடிலமென் மருத்தவமனையினை நாடியுள்ளார். £25,000 (இந்திய மதிப்பில் 22,64,812) செலவு செய்து அதற்கான அறுவை சிகிச்சையினையும் செய்துக்கொண்டார்.

பொதுவாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும்போது, சிகிச்சை பெறுவோரின் தொடை பகுதியில் இருக்கும் சதையினை வெட்டி தான் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் Grigorieva-வின் தொடை பகுதி வெட்டப்பட்டு அவரது மார்பு பகுதி அழகு படுத்தப்பட்டுள்ளது.

பின் தொடையில் அவரது சதை வெட்டியடுக்கப் பட்ட நிலையில் சிகிச்சை முடிந்த பல மாதங்கள் ஆகியும் அவரால் சரிவர அமர முடியவில்லை. சுமார் 6 நிமிடங்களுக்கு கூட தன்னால் ஒரு இடத்தில் அமர முடியா நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் இதுதொடர்பாக மருத்தவர் உதவியை நாடினார். அப்போது அவரது பின் தொடையில், சதை வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் பெரிய துவாரம் இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவர்களின் கவணக்குறைவால் Grigorieva-ன் பின் தொடை சரியாக தைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. மேலும் தனக்கு செய்யப்பட்ட மார்பு அறுவை சிகிச்சையிலும் மருத்துவர்கள் தோற்றுள்ளனர் என அவர் குறிப்பிட்டு, தனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட மருத்துவர்களை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். தனது அறுவை சிகிச்சையில் மேற்கொண்ட தவறினை சரி செய்யும் விதமாக மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவர்களின் தரப்பில் இருந்து சரியான பதில் இல்லை.

fallbacks

இதனையடுத்து தனது உடலின் சேதமடைந்த பகுதிகளின் புகைப்படங்களை கொண்டு நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது குற்றவியல் பிரிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பிளாஸ்டிக் சர்ஜன்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Read More