Home> Health
Advertisement

இரவில் கால் பிடிப்பு பிரச்சனையா? இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்!!

Health Tips: பலருக்கு இரவு அல்லது நடு இரவில் தூங்கும் போது திடீரென கால் பிடிப்புகள் ஏற்படுவதுண்டு. இந்த வலி ஏன் ஏற்படுகின்றது? 

இரவில் கால் பிடிப்பு பிரச்சனையா? இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்!!

Health Tips: பலருக்கு இரவு அல்லது நடு இரவில் தூங்கும் போது திடீரென கால் பிடிப்புகள் ஏற்படுவதுண்டு. இது மிகவும் வேதனையான ஒரு வலியாக இருக்கும். வலி சற்றி சரியானவுடன் சில சமயம் சிலர் அதன் பின் எழுந்து நடக்கிறார்கள், சிலர் நீர் குடிக்கிறார்கள். இவற்றின் மூலம் வலி சரியாகும் என நம்புகிறார்கள். ஆனால், சில நேரங்களில் வலி கணிசமாக அதிகரிக்கிறது. இந்த வலி ஏன் ஏற்படுகின்றது? இதன் தீர்வு என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இரவில் கால் பிடிப்புகள் ஏற்பட காரணம் என்ன? (What is the Reason For Leg Cramps at Night)

இது ஒரு பொதுவான விஷயம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட மூன்றில் ஒருவருக்கு இரவில் அல்லது பகலிலும் கூட இதுபோன்ற பிரச்சனை ஏற்படுகின்றாது. கால் பிடிப்புகள் (Leg Cramps) பிரச்சனை பொதுவாக வைட்டமின் பி 12 (Vitamin B12) குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. உடலில் இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால், கால்களில் வலி ஏற்படலாம்.

போதுமான அளவு வைட்டமின் பி12 இருப்பது முக்கியம்

வைட்டமின் பி12 உடலில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வைட்டமின் பி 12 என்பது கரையக்கூடிய பொருளாகும். இது உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதில் குறைபாடு ஏற்படும் போது, ​​உடலின் கீழ் பகுதியில் பிடிப்புகள் அல்லது வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சில நேரங்களில் வலி கடுமையாக இருக்கும். ஆகையால் இந்த வலியை தவிர்க்க உணவில் வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ பழக்கங்கள்!

வைட்டமின் பி12 உள்ள உணவுகள் (How to include Vitamin B12 in Body?)

மேலும், வைட்டமின் பி12 -ஐ உடலில் அதிகரிக்க அசைவ உணவுகளை (Non Vegetarian) சாப்பிடலாம். வைட்டமின் பி12 குறிப்பாக மீன், கோழி மற்றும் முட்டைகளில் அதிக அளவில் காணப்படுகிறது. மறுபுறம், சைவ உணவு உண்பவர்கள், பச்சை இலைக் காய்கறிகள், உலர் பழங்களான பிஸ்தா, பாதாம் மற்றும் பாலாடைக்கட்டி, பால் மற்றும் மோர் போன்ற பால் பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்கலாம்.

போதுமான தண்ணீர் குடிக்கவும்

வைட்டமின் பி 12 ஐ அதிக அளவில் சேர்க்க, ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். போதுமான அளவு நீர் குடிப்பதால் பிடிப்பு (Cramps) பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சரிவிகித உணவு (Balanced Food) மற்றும் சரியான அளவு தண்ணீர் (Water) உட்கொண்டால், பிடிப்புகள் பிரச்சனை சில நாட்களில் எளிதில் மறைந்துவிடும்.

பெரியவர்கள் தினமும் சுமார் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 -ஐ உட்கொள்ள வேண்டும். இதை ஒருவர் பெறவில்லை என்றால், உடல் படிப்படியாக பலவீனமடையும். இதன் காரணமாக, சுவை மற்றும் வாசனை இழப்பு, நினைவாற்றல் இழப்பு மற்றும் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் பலவீனமடைகிறது. பெரும்பாலான வைட்டமின்களைப் போலவே, வைட்டமின் பி 12 ஐ உடலால் உருவாக்க முடியாது. அதற்கு பதிலாக, நம்மால் அவற்றை சப்ளிமெண்ட்ஸ் அல்லது உணவில் இருந்து பெற முடியும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முதுமையை தடுக்கும் மிளகு.. உடலில் இத்தனை கோளாறுகளை நீக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More