Home> Health
Advertisement

தூக்கத்தை கெடுக்கும் குறட்டை: காரணங்கள், வீட்டு வைத்தியங்கள் இதோ

Snoring: குறட்டை என்பது தூக்கத்தின் தரத்தை மட்டும் பாதிக்கும் ஒரு விஷயம் அல்ல. இது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. 

தூக்கத்தை கெடுக்கும் குறட்டை: காரணங்கள், வீட்டு வைத்தியங்கள் இதோ

Snoring: குறட்டை என்பது ஒரு பொதுவான ஒரு பிரச்சனையாகக் கருதப்படுகிறது. பலர் இந்த பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். ஆனால் குறட்டை விடும் நபரை விட அவர் அருகில் தூங்கும் நபர்களுக்கு தான் பிரச்சனை அதிகமாக இருக்கும் என்பதும் உண்மை. சத்தம் வந்தால் சரியான தூக்கம் வராதவர்களுக்கு பிறரின் குறட்சை சத்தம் தூக்கத்தை முழுமையாக கெடுத்து விடுகின்றது. 

குறட்டை என்பது பலருக்கு வேடிக்கையான ஒரு விஷயமாக இருந்தாலும், அது ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. தொடர்ந்து சத்தமாக குறட்டை விடுவது தொண்டை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆகையால், உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ குறட்டை பிரச்சனை இருந்தால் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். குறட்டை என்பது தூக்கத்தின் தரத்தை மட்டும் பாதிக்கும் ஒரு விஷயம் அல்ல. இது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. 

தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும்போது பொதுவாக குறட்டை வருகிறது. இது ஸ்லீப் அப்னியா (Sleep apnea) என்று அழைக்கப்படுகின்றது. தூக்கத்தின் போது ஒருவரது சுவாசப்பாதை குறுகலானாலோ அல்லது அடைக்கப்பட்டாலோ  இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை நீண்ட காலம் புறக்கணித்தால், அது தொண்டை மற்றும் சுவாசக் குழாயின் செல்களை சேதப்படுத்தும். இது இறுதியில் புற்றுநோய் வடிவத்தையும் எடுக்கக்கூடும் என கூறப்படுகின்றது. 

குறட்டை வருவதற்கான சில போதுமான காரணங்கள்:

உடல் பருமன்: உடல் பருமன் குறட்டைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக தொண்டை மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள கொழுப்பு சுவாசக் குழாயைச் சுருக்குகிறது.

ஒவ்வாமை: மூக்கு அல்லது தொண்டையில் வீக்கம் மற்றும் சளி சேர்வதும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இது குறட்டைக்கு வழிவகும். ஆகையால் இந்த ஒவ்வாமைகளும் குறட்டை பிரச்சனைக்கு காரணமாகலாம்.

மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல்: மது அருந்துவதும் புகைபிடித்தலும் தொண்டை தசைகளை தளர்த்தும். இதனால் சுவாசப்பாதைகள் சுருங்கி அது குறட்டைக்கு வழிவகுக்கிறது.

தூங்கும் நிலை: தூங்கும் போது மல்லாக்காக படுத்துக்கொண்டு உறங்குவதால் சுவாசக் குழாயில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது குறட்டைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | உடல் எடையை உடனே குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க போதும்

குறட்டையிலிருந்து விடுபடுவது எப்படி

- உடல் பருமனாக இருந்தால், உடல் எடையை குறைக்க வேண்டியது மிக அவசியமாகும். எடை இழப்பு குறட்டை பிரச்சனையில் நிவாரணம் அளிக்கக்கூடும். இது சுவாசக் குழாயின் அழுத்தத்தைக் குறைத்து சுவாசத்தை எளிதாக்குகிறது.

- நேராக, அதாவது கீழே முதுகு உள்ளபடி தூங்குவதற்கு பதிலாக, இடது அல்லது வலது பக்கமாக திரும்பி படுத்துக் கொள்ளுங்கள். இதனால் சுவாசப் பாதையில் அழுத்தம் குறைவதுடன் குறட்டை பிரச்சனையும் குறையும்.

- மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் நிறுத்த வேண்டும். இதனால் தொண்டை தசைகள் வலுவாக இருப்பதோடு குறட்டை பிரச்சனையும் குறைய வாய்ப்புள்ளது. இது பிற உடல்நல பிரச்சனைகளிலிருந்தும் உங்களை பாதுகாக்கும்.

- தூங்கும் முன் ஆவி பிடிப்பது மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளை சுத்தமாகி, சுவாசத்தை எளிதாக்குகிறது. இதன் காரணமாக குறட்டை பிரச்சனை குறைகிறது.

- வழக்கமான உடற்பயிற்சிகள் உடலின் தசைகளை பலப்படுத்துகின்றன. உடல் செயல்பாடுகள் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து குறட்டை பிரச்சனையை மேம்படுத்துகின்றன. 

- வழக்கமான மற்றும் போதுமான தூக்கம் மிக அவசியமாகும். தூக்கமின்மையால், தொண்டை தசைகளும் தளர்ந்து, குறட்டை பிரச்சனை அதிகரிக்கிறது.

குறட்டை பிரச்சனை அதிகமாக இருந்து  மேலே குறிப்பிடப்படுள்ள நடவடிக்கைகள் மூலம் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகவும். அவர் உங்கள் நிலையை சரியாகக் கண்டறிந்து சரியான சிகிச்சையை வழங்குவார்.

மேலும் படிக்க | வயசானாலும் இளமையாக இருக்க உதவும்... கொலாஜன் நிறைந்த சூப்பர் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More