Home> Health
Advertisement

உள்ளங்கைகளை தேய்த்துக்கொண்டால் இவ்வளவு நல்லதா!! வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Benefits of Palm Rubbing: அதிகாலையில் எழுந்தவுடன் இரு உள்ளங்கைகளையும் தேய்த்து, தேய்க்கும் போது ஏற்படும் உஷ்ணத்தால் கண்களை சூடாக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். 

உள்ளங்கைகளை தேய்த்துக்கொண்டால் இவ்வளவு நல்லதா!! வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Benefits of Palm Rubbing: காலையில் எழுந்தவுடன் இரு கைகளை சேர்த்து தேய்த்துக்கொள்பவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இது பலருக்கு பொதுவாக உள்ள ஒரு பழக்கம் என்றாலும், இதில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. இந்த பழக்கம் ஏன் உருவானது? இதைச் செய்வதால் ஏதேனும் ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுமா? இதைப் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கைகளை தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? 

அதிகாலையில் எழுந்தவுடன் இரு உள்ளங்கைகளையும் தேய்த்து, தேய்க்கும் போது ஏற்படும் உஷ்ணத்தால் கண்களை சூடாக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்படிச் செய்வதால் உறக்கம் முழுமையாக கலையும் என்றும் இதன் மூலம் உடலில் உடனடி ஆற்றல் பெருகும் என்றும் கூறப்படுகின்றது. இது தவிர கைகளை தேய்த்துக்கொள்வதால் இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன. 

கைகளை தேய்த்துக்கொள்வதால் கிடைக்கும் 5 அளப்பரிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்

மன அழுத்தம்

காலையில் இரண்டு உள்ளங்கைகளையும் தேய்ப்பதால் பதற்றம் மற்றும் மன அழுத்தம் (Mental Tension) ஆகியவை குறைகின்றன. உள்ளங்கைகளை தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது மூளையை அமைதிப்படுத்தி அதற்கு ஓய்வளிக்கின்றது. இந்த சிறிய செயல்பாட்டின் மூலம் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறலாம். 

கவனம்

காலையில் எழுந்ததும் இரண்டு உள்ளங்கைகளையும் 2-3 நிமிடம் தேய்த்துக்கொண்டால், ​​அந்த நேரத்தில் ஏற்படும் உணர்வுகளால் மனம் சுறுசுறுப்பாக இருக்கும். மூளை உடனடியாக செயல் முறைக்கு செல்லும் செய்தியைப் பெறுகிறது. இதன் காரணமாக நமது கவனம் (Focus) அதிகரிக்கிறது. மூளையின் கவனம் செலுத்தும் சக்தி அதிகமாவதால், வேலை மற்றும் படிப்பில் கவனம் செலுத்துவது எளிதாகிறது.

மேலும் படிக்க | எக்ஸ்ரே, CT ஸ்கேன் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா... மருத்துவர்கள் கூறுவது என்ன...

சீரான மனநிலை

உள்ளங்கைகளை தேய்ப்பது உங்கள் மனநிலையை உற்சாகமாக வைக்கின்றது. 2 நிமிடம் கைகளைத் தேய்க்கும்போது, ​​மூளையில் சந்தோஷ ஹார்மோன்கள் வெளியாகும். மகிழ்ச்சி ஹார்மோன்களின் (Happy Hormones) விளைவால், மனநிலை நன்றாக இருக்கும். இதனால் எரிச்சல், கோவம் போன்ற உணர்வுகள் குறையத் தொடங்குகிறது.

சிறந்த தூக்கம்

தூங்குவதில் சிக்கல் இருப்பவர்கள் தினமும் காலையில் இந்த 2 நிமிட பயிற்சியை செய்யத் தொடங்கலாம். உள்ளங்கைகளைத் தேய்ப்பதன் மூலம் உங்கள் மனம் ரிலாக்ஸ் ஆகும். இரவு தூங்கும் முன் கைகளை தேய்த்தால் நல்ல தூக்கம் (Sleep) வரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குளிர்காலம் 

இன்னும் சில நாட்களில் குளிர்காலம் (Winters) தொடங்க உள்ளது. இந்த பருவத்தில், கைகளை தேய்த்துக்கொள்வதால், உடலில் உஷ்ணம் உண்டாகிறது. குளிர்காலத்தில் கைகளை தேய்ப்பதால் விரல்களின் விறைப்பு நீங்கும். நடுக்கமும் போய்விடும். இது குளிர்காலத்தில் உடலுக்கு சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

இவை மட்டுமின்றி, உள்ளங்கைகளை தேய்ப்பதால் மேம்பட்ட ஆற்றல், கண்கள் பாதுகாப்பு, தைரியம், சிறந்த இரத்த ஓட்டம், சீரான மனநிலை ஆகிய நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றன.

மேலும் படிக்க | இதயம் முதல் சிறுநீரகம் வரை... அளவிற்கு அதிக உப்பு மெல்லக் கொல்லும் விஷம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More