Home> Health
Advertisement

Weight Loss Worries: இளைஞர்களின் மிகப்பெரிய கவலை: உணவும் உடல் எடையும்

Weight Loss Worries among Teenagers: உடல் எடையை எப்படி குறைப்பது என்பதே இன்றைய இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கினரின் மாபெரும் கவலையாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது...

Weight Loss Worries: இளைஞர்களின் மிகப்பெரிய கவலை: உணவும் உடல் எடையும்

Weight Loss: குண்டாக இருக்க வேண்டாம், ஒல்லியாக வேண்டும் என்ற எண்ணம் உலக அளவில் அதிகரித்துள்ளது. உடல் பருமனாக இருப்பவர்களின் கவலைகள் மிகவும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளும் சொல்கின்றன. குழந்தைகள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக அண்மை ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. அதே நேரத்தில் அதிக எடை கொண்ட குழந்தைகளின் விகிதம் இரட்டிப்பாகியிருப்பதாகவும் தெரியவந்ததுள்ளது. இது தோற்றம் தொடர்பான கவலையாக இருந்தாலும் சரி, ஆரோக்கியம் பற்றிய அறிவாக இருந்தாலும் சரி, ஆக்கப்பூர்வமான செய்தி என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அதிக எடை மற்றும் பருமனான குழந்தைகள் உடல் எடையை குறைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், அவர்களது சுகாதார சிந்தனையை வளர்ப்பதாக இருக்கும். கால்வாசிக்கும் அதிகமான ஆரோக்கியமான பதின்வயதினர் உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும் 

1997 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார ஆய்வில் 8 முதல் 17 வயதுக்குட்பட்ட 34,235 குழந்தைகளின் பதில்கள் குழந்தைகளின் ஆரோக்கிய நடத்தைகள் கண்காணிக்கப்பட்டன.

fallbacks

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வில் ஆரோக்கியமான உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) கொண்ட குழந்தைகளின் விகிதம் முந்தைய இரண்டு தசாப்தங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்பதைக் கண்டறிந்தனர்.

ஒரு கணக்கெடுப்பில், மூன்று முக்கிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. குழந்தைகள் வளர வேண்டுமா, பராமரிக்க வேண்டுமா அல்லது எடையைக் குறைக்க வேண்டுமா என்ற கேள்விகள் அவை.

மேலும் படிக்க | உடல் எடை குறைய வைக்கும் சோயாவின் புரோட்டின்

1997 இல் இந்த ஆய்வு தொடங்கியபோது 5 சதவீதம் பேர் மட்டுமே உடல் எடையை குறைக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் 2016 ஆம் ஆண்டுக்குள் அது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 26.5 சதவீத இளைஞர்கள் உடல் எடையை குறைக்க முயற்சிப்பதாக ஆய்வு கூறுகிறது. 13 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் எடையைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று Archives of Disease in Childhood என்ற மருத்துவ சஞ்சிகை கூறுகிறது. 

அதிகமான குழந்தைகள் தங்கள் உடல் எடையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்ற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கது, ஆனால் இந்த வெற்றியை எச்சரிக்கையுடன் வரவேற்க வேண்டும். ஆரோக்கியமான எடை கொண்ட குழந்தைகள் 'டயட்' செய்வதாகத் தோன்றுவது கவலைக்குரியது, அதிலிருந்து வெளியேறுமாறு அவர்களுக்கு நாசூக்காக உணர்த்துவது அவசியம் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More