Home> Health
Advertisement

வேகமா உடல் எடை குறையணுமா? அதுக்கு இதை சாப்பிட்டா போதும்... ஈசியா குறைக்கலாம்

Weight Loss Tips: உடல் எடையை வேகமாக குறைக்க எந்தெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

வேகமா உடல் எடை குறையணுமா? அதுக்கு இதை சாப்பிட்டா போதும்... ஈசியா குறைக்கலாம்

உடல் பருமன்: உடல் பருமன் பொதுவாக ஒரு நோயாக கருதப்படுவதில்லை. ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பார்த்தால், அது எந்த நோய்க்கும் குறைவானது இல்லை என்றே தோன்றுகிறது. உடல் பருமனால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. உடல் பருமனால் 13 வகையான புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உடல் பருமனை தவிர்க்க பலர் அறுவை சிகிச்சை கூட செய்து கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமளிக்கும் உண்மையாகும். 

குறைந்த கலோரி உணவுகள்: 

உடல் பருமன் ஒரு தீவிர பிரச்சனையாக உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எடை மிக அதிகமானால், அது உங்கள் தோற்றத்தை கெடுக்கும். அதே நேரத்தில், உடல் பருமன் காரணமாக, பல நோய்களும் உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம். உடல் எடையை கட்டுப்படுத்த, உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவையும் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடல் தேவையானதை விட அதிக கலோரிகளை உட்கொள்ளும்போது, ​​​​உடலில் கொழுப்பு குவிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பலர் உடல் பருமன் என்ற மாபெரும் பிரச்சனைக்கு பலியாகிறார்கள். இந்நிலையில் கலோரி குறைவாக இருக்கும் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க எந்தெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

உடல் பருமனை குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுவது நன்மை பயக்கும்:

தயிர்

தயிர் குறைந்த கலோரி கொண்ட ஒரு நல்ல உணவு வகையாக உள்ளது. இது புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்க உதவுகிறது. இது சர்க்கரைக்கான ஏக்கத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக நீங்கள் ஆரோக்கியமற்ற உணவை உண்பதில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், வெறும் தயிரில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும், கலோரிகள் அதிகமாகவும் உள்ளது என்பதை நினைவில் கொள்க. ஆகையால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாதாரண தயிர் சாப்பிட்டாலே போதும், நல்ல வித்தியாசம் தெரியும். 

மேலும் படிக்க | அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைக்கணுமா? அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிட்டுங்கள்

முட்டைகள்

எடை இழப்புக்கு முட்டை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் புரதச்சத்து அதிகமாகவும் கலோரிகள் மிகவும் குறைவாகவும் உள்ளன. காலை உணவில் முட்டை சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருப்பதோடு, மீண்டும் மீண்டும் பசி எடுக்கும் உணர்வும் ஏற்படாது. இதனால், நீங்கள் தேவையில்லாத ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படும். இந்த வகையில் முட்டை உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இந்த காரணங்களால், முட்டைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும். 

மேலும் படிக்க | விரை வீக்கத்தை குணப்படுத்தும் கரிசலாங்கண்ணி கீரை..! இதோ

ஆப்பிள்:

தினமும் ஒரு ஆப்பிளை உட்கொள்வதால் நோய்கள் வராமல் இருப்பது மட்டுமின்றி உடல் எடையும் கட்டுப்படும். இதில் உள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. ஆகையால் ஆப்பிள் என்னும் இந்த அற்புத பழம் உடல் எடை குறைப்பதில் மிக உதவியாக இருக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Health Tips: என்னங்க சொல்றீங்க..!இந்த 5 காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More