Home> Health
Advertisement

உடல் எடையை குறைக்க வேண்டுமா: இரவில் இந்த உணவுகளை தவிர்த்தால் போதும்

இரவில் அதிகமாக உண்பதால், உடல் எடை அதிகரிப்பதோடு நெஞ்செரிச்சல், அஜீரணம், அமிலம் உருவாவது, தூக்கம் சீர்குலைவது என பல பிரச்சனைகள் உருவாகும்

உடல் எடையை குறைக்க வேண்டுமா: இரவில் இந்த உணவுகளை தவிர்த்தால் போதும்

புதுடெல்லி: உடல் பருமனைக் குறைக்க பல்வேறு கடினமான முயற்சிகளை பலரும் மேற்கொண்டு வரும் நிலையில் சில சிறிய விஷயங்களில் கவனக்குறைவாக இருப்பது அத்தனை முயற்சிகளையும் வீணாக்கிவிடுகிறது.

எடை குறைப்பில் இரவு முக்கியமான பங்கு வகிக்கிறது. இரவில் அதிக உணவுகளை உண்பது, உடல் பருமனை அதிகரிக்கும். இரவு நேரத்தில் செரிமான நடைமுறைகள் மந்தமாகிவிடுவதால், அதிக கொழுப்பு மற்றும் சத்துள்ள உணவுகளை உடலால் ஜீரணிக்க முடியாது.

எனவே இரவில் அதிகமாக உண்பது, சக்திகளை கூடுதல் கொழுப்பாக சேமித்து, எடையை அதிகரிக்க செய்யும். அதிலும் குறிப்பாக இரவில் சாப்பிடும் உணவு இடுப்பில் அதிக சதையை (Belly Fat) உருவாக்கும்.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம் 

இரவில் லேசான உணவை உண்ணுங்கள்
நமது செரிமான அமைப்பு காலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மற்றும் இரவு நேரத்தில், அது மெதுவாக இருக்கும். அதனால்தான், குறிப்பாக உடல் எடையை குறைக்க நீங்கள் சிரமப்படும்போது, ​​லேசான இரவு உணவை சாப்பிடுமாறு அறிவுறுத்துகிறோம்.

இரவில் அதிகமாக உண்பதால், நெஞ்செரிச்சல், அஜீரணம், அமிலம் உருவாவது, தூக்கம் சீர்குலைவது என பல பிரச்சனைகள் உருவாகும். அதோடு, தூக்கமின்மை இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் எடை உள்ளிட்ட பல்வேறு உடல்நல சவால்களை அதிகரிக்கிறது இரவில் சாப்பிடும் அதிக உணவு.

அதுமட்டுமல்ல, உடலின் சக்தியில் அதிக அளவு செரிமானத்திற்காக வயிற்றுக்கு அனுப்பப்படுவதால், மூளைக்கான இரத்த விநியோகம் குறைக்கப்படலாம். இதனால் காலையில் எழுந்ததும் மன அழுத்தம் மற்றும் சோர்வாக உணரவும் வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க | ஃப்ரிட்ஜ் வாட்டருக்கும் மண்பானை தண்ணீருக்கும் போட்டி: ஜெயிப்பது யார்

எனவே  தூங்குவதற்கு சற்று முன்பு குறைந்த அளவு கார்போஹைட்ரேட், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கொண்ட லேசான உணவை உட்கொள்வது உடல் மட்டும் மன ஆரோக்கியத்திற்கு நலல்து.. விரைவாக உடல் எடையை குறைக்க இரவில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இங்கே.

ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் அதிக அளவு கரையாத நார்ச்சத்து கொண்டவை, இவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே, இந்த காய்கறிகளை இரவு உணவில் தவிர்ப்பது நல்லது.

fallbacks

தக்காளி சாஸ்
தக்காளி சாஸில் ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப் (எச்எஃப்சிஎஸ்) உள்ளது, இது சோள மாவுச்சத்தில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்புப் பொருளாகும், இது, உடலில் ஏற்படுத்தும் விளைவானது சர்க்கரையைப் போலவே இருக்கும். இதன் அதிக அமிலத்தன்மை நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தையும் ஏற்படுத்தும்.

ஐஸ்க்ரீம்
ஐஸ்கிரீமில் ஏராளமான சர்க்கரை மற்றும் கலோரிகள் உள்ளன, இது உங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியை சீர்குலைக்கும். ஐஸ்கிரீமை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

fallbacks
 

சிவப்பு இறைச்சி
ஆட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சிகளில் அதிக அளவு புரதம் உள்ளது, இது எடை இழப்புக்கு அவசியம். ஆனால் அவற்றில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம்.

எனவே, இந்த வகையான சிவப்பு இறைச்சியைத் தவிர்த்துவிட்டு, இரவு உணவிற்கு ஆரோக்கியமான வெள்ளை இறைச்சி - கோழி இறைச்சியை மாற்றுவது நல்லது.

கருப்பு சாக்லேட்
மில்க் சாக்லேட்டை விட டார்க் சாக்லேட் ஆரோக்கியமானதாக இருக்கலாம், ஆனால் அதில் உள்ள சர்க்கரை உங்கள் எடை இழப்பு செயல்முறையைத் தடுக்கலாம். இரவில் விழிப்புடன் இருக்கக்கூடிய அமினோ அமிலமும் இதில் உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More