Home> Health
Advertisement

Brain Health: மூளையை டேமேஜ் செய்யும் ‘4’ ஆபத்தான பழக்கங்கள்..!!

உங்கள் மூளை எப்போதும் கம்ப்யூட்டரை  போல் வேகமாக இயங்க வேண்டும் என விரும்பினால், மூளை பாதிக்கும் கெட்ட பழக்கங்களை நிச்சயம் கை விட வேண்டும் என்பதோடு, மூளைக்கு ஆற்றலை கொடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும். 

Brain Health: மூளையை டேமேஜ் செய்யும் ‘4’ ஆபத்தான பழக்கங்கள்..!!

Harmful Habits that affects brain: உங்கள் மூளை எப்போதும் கம்ப்யூட்டரை  போல் வேகமாக இயங்க வேண்டும் என விரும்பினால், மூளை பாதிக்கும் கெட்ட பழக்கங்களை நிச்சயம் கை விட வேண்டும் என்பதோடு, மூளைக்கு ஆற்றலை கொடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும். 

நமது உடலை கட்டுப்படுத்தும் மூளை, கூர்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் எந்த வேலையையும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும். கூர்மையான மூளை உள்ளவர்களால் தான்,  உலகில் தனக்கான அடையாளத்தை உருவாக்க முடியும். ஆனால் சில பழக்கங்கள் உங்கள்  மூளையை என்பது உங்களுக்குத் தெரியுமா?  மூளையின் செயல் திறனை பாதிக்கும் பழக்கங்களால், மூளை மந்தமாகிறது. மூளைக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் மூளையை கூர்மையாக்க என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள்: 

பின்வரும் பழக்கங்கள், மூளையின் செயல்திறனை பாதிக்கிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

1. காலை உணவை தவிர்த்தல்

காலை உணவைத் தவிர்ப்பது உங்கள் மூளையை பாதிக்கும் ஒரு ஆபத்தான பழக்கம். ஏனெனில், இதன் காரணமாக மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் நாள் முழுவதும் மந்தமாக செயல்படும் . இதனால், மூளை கூர்மையாக வேலை செய்ய இயலாத நிலை உருவாகிறது. 

2. கோபம் 

சிறிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சி வசப்பட்டு அதிகம் கோபப்பட்டால், அது உங்கள் மூளையும் வேலை செய்ய இயலாமல் முடக்கிவிடும்.  ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என கூறுவது இதனால் தான். ஏனெனில், கோபம் உங்கள் மூளையின் இரத்த தமனிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் செயல் திறனை பாதிக்கிறது. இது மூளை யோசிக்கும் திறனை இழக்கிறது.

3. குறைவான தூக்கம்

குறைவான தூக்கம் உங்கள் மூளையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். போதுமான தூக்கமின்மையால், மூளை செல்கள் ஓய்வெடுக்க முடியாமல் சோர்வடையும். அதே சமயம் முகத்தை  மூடிக்கொண்டு தூங்கினால், உறங்கும் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இது மூளையை தளர்வடைய செய்யும்.

ALSO READ | வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு; ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன..!!

4. அதிக  அளவில் சர்க்கரை சாப்பிடுவது

உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரையானது மூளையின் அறிவாற்றல் திறனை மிக மோசமாக பாதிக்கிறது என்று பல்வேறு நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உங்கள் நினைவாற்றலும் குறையத் தொடங்குகிறது. அதனால், மூளை மந்தமாகிறது.

மூளைக்கான ‘சூப்பர்’ உணவுகள்:

மூளை கூர்மையாக இருக்க, கணிணி போல் சூப்பராக வேலை செய்ய  கீழ்கண்ட உணவை உட்கொள்ளலாம்.

fallbacks

1. பூசணி விதைகள்

2. டார்க் சாக்லேட்

3. ப்ரோக்கோலி

4. பாதம் பருப்பு

5. வாதுமை பருப்பு

6. கிரீன் டீ

7. மாதுளை

8. பெர்ரி, முதலியன

( பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)

ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More