Home> Health
Advertisement

உலகின் தடுப்பூசி மையமாக இந்தியா விளங்குகிறது: ஐநா தலைவர்

 இந்தியா உலகின் மருந்தகமாக,  உலகின் மிகப்பெரிய தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது என ஐநா பாராட்டியுள்ளது.  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் போன்ற இந்திய நிறுவனங்கள் கோவிட் -19 தடுப்பூசிகளை தயாரிப்பதில் முக்கிய பங்கு  வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் தடுப்பூசி மையமாக இந்தியா விளங்குகிறது: ஐநா தலைவர்

உலகில்  தடுப்பூசி தயாரிக்கும் மையமாக இந்தியா உள்ளது என  கூறிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்  உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு COVID-19 தடுப்பூசிகளை வழங்கியதற்காக இந்தியாவைப் பாராட்டினார். இந்தியா உலகின் மருந்தகமாக,  உலகின் மிகப்பெரிய தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது என்றார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் போன்ற இந்திய நிறுவனங்கள் கோவிட் -19 தடுப்பூசிகளை தயாரிப்பதில் முக்கிய பங்கு  வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

"உலகளாவிய தடுப்பூசி போடும் பணியில் முக்கிய பங்கு வகிக்க தேவையான அனைத்து அமசங்களும் இந்தியாவிற்கு உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன் இன்று உலகிற்கு கிடைத்துள்ள சிறந்த சொத்துகளில் ஒன்றாகும் என்று நான் நினைக்கிறேன், அது முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உலகம் புரிந்துகொண்டிருப்பதாக நான் நம்புகிறேன், "என்று UN பொது செயலர் கூறினார்.

"தடுப்பூசி மைத்ரி" என்று அழைக்கப்படும் இந்தியாவின் தடுப்பூசி முன்முயற்சியின் கீழ் முதலாம் கட்டமாக ஒன்பது நாடுகளுக்கு 60 லட்சத்திற்கும் அதிகமான COVID-19 தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் (COVAX )  என்று அழைக்கப்படும் முயற்சிக்கு உதவும் வகையில் தடுப்பூசி வழங்கப்படும் என்று புது தில்லி தெரிவித்துள்ளது.

COVAX என்பது வருமானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அனைத்து நாடுகளுக்கும் COVID-19 தடுப்பூசிகளை சிறந்த வகையில் வழங்குவதை உறுதி செய்வதற்கான உலகளாவிய முன்முயற்சி ஆகும்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் தற்போதுள்ள ஒப்பந்தங்கள் மூலம், கோவாக்ஸ் WHO அவசரகால பயன்பாட்டிற்கு அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு தயாரிக்கும் தடுப்பூசி கிட்டத்தட்ட 15 கோடி தடுப்பூசிகள்,  2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

COVID-19 தடுப்பூசிகளை தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பியதற்காக ஜோ பிடன் நிர்வாகம் இந்தியாவைப் பாராட்டியுள்ளது. உலக சமூகத்திற்கு உதவ தனது மருந்தைப் உலகிற்கு வழங்கும்  இந்தியாவை "ஒரு உண்மையான நண்பர்" என்று பாராட்டியுள்ளது அமெரிக்கா.

நேபாளம் (Nepal), பங்களாதேஷ், பூட்டான், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசிகளை, இந்தியா மானிய உதவியின் கீழ் வழங்கியுள்ளது.

ALSO READ | பிரதமர் மோடிக்கு நன்றி என சஞ்சீவினியை தூக்கும் ஹனுமன் படத்துடன் பிரேசில் அதிபர் ட்வீட் ..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More