Home> Health
Advertisement

வயிற்றில் வாயு பிரச்சனையா? புர்.... சத்தம் தரும் சங்கடத்தை தவிர்க்கும் சூப்பர்ஃபுட்ஸ்

Gastric Problems: வாயு பிரச்சனையால் அவதியா? வயிற்றில் வாயு உருவானால் பலவிதமான சங்கடங்கள் ஏற்படும். வயிற்றில் வாயு உருவாகும் பிரச்சனை இருந்தால், அதை வெகு சுலபமாக போக்கும் வீட்டு வைத்தியங்கள் இவை

வயிற்றில் வாயு பிரச்சனையா? புர்.... சத்தம் தரும் சங்கடத்தை தவிர்க்கும் சூப்பர்ஃபுட்ஸ்

பெரும்பாலும் வயிற்றில் வாயு பிரச்சனை பலருக்கும் ஏற்படுவது. நீங்களும் இந்தப் பிரச்சனையில் போராடி, அதைச் சமாளிப்பதற்கான வழியைத் தேடுபவரா? வாயுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் பெற சிறந்த வீட்டு வைத்தியங்கள் இவை.

வயிற்றில் அடிக்கடி வாயு உருவாவதற்கான பிரச்சனைக்கு மக்களின் வாழ்க்கை முறை மாற்றங்களே காரணம். ஆரோக்கியமற்ற உணவு மற்றும் மந்தமான வாழ்க்கை முறை காரணமாகும். யாருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதோ, அவருக்கு மீண்டும் மீண்டும் வாயு உருவாகி வயிறு அல்லது குடல் வீங்கத் தொடங்குகிறது.

வயிற்றில் ஏற்படும் வாயு, சில நேரங்களில் மார்பு வலியை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில், வாயுத்தொல்லை அதிகமாகி, வாந்தி கூட வர ஆரம்பிக்கும். அதை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வயிற்றில் ஏற்படும் வாயுப் பிரச்சனைக்கு சரியான மருந்து உங்கள் சமையலறையிலேயே உள்ளது.

வயிற்று வாயுவை உடனடியாக குணப்படுத்த உங்கள் உணவில் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தலாம். இதனுடன், வயிற்றில் உள்ள வாயுவைப் போக்க சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துங்கள். வாயு தொடர்பான பிரச்சினைகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் கிச்சன் கில்லாடிகள் இவை

மேலும் படிக்க | அதிகப்படியான வைட்டமின் டி கூட ஆபத்தானது! அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்

சீரகத் தண்ணீர்
வாயுப் பிரச்சனைக்கு சீரக தண்ணீர் சிறந்த வீட்டு வைத்தியம். சீரகத்தில் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன, இது உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது, இது உணவை செரிமானம் செய்ய உதவுகிறது மற்றும் அதிகப்படியான வாயு உருவாவதைத் தடுக்கிறது.
 
பெருங்காயம்

வாயுப் பிரச்சனையை நீக்க பெருங்காயம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் பெருங்காயத்தை கலந்து குடித்தால் வயிற்று வாயு குறையும். இது வாயுவிலிருந்து உடனடி நிவாரணம் தரும்.

இஞ்சி
இஞ்சி பல நோய்ககளை குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. வயிற்று வாயுவை அகற்ற இஞ்சியைப் பயன்படுத்தலாம், இஞ்சி வயிற்று வாயுவிலிருந்து நிவாரணம் பெற மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பால் இல்லாமல் டீயும் சாப்பிடலாம்

ஓமம்
அஜ்வைன் விதைகளில் தைமால் என்ற கலவை உள்ளது, இது இரைப்பையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

மேலும் படிக்க | உனக்கு மூளை இருக்கா? நாலு பேர் கேள்வி கேட்டா, இந்த 4 விஷயத்தை சரிபார்க்கவும்

துளசி இலைகள்
துளசி இலைகளில் கார்மினேட்டிவ் பண்புகள் உள்ளன, இது அமிலத்தன்மையிலிருந்து உடனடி நிவாரணம் பெற உதவுகிறது. இதற்கு மூன்று முதல் நான்கு துளசி இலைகளை மட்டும் சாப்பிட்டால் போதும். தண்ணீரில் துளசியை போட்டு வைத்தால், துளசியின் மணமும், குணமும் அதில் இறங்கிவிடும். அதை குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வாழைப்பழம்
அமிலத்தன்மை அல்லது வாயுவிலிருந்து நிவாரணம் பெற வாழைப்பழங்கள் நல்ல பலனளிக்கும். வாழைப்பழத்தில் இயற்கையான ஆன்டாக்சிட்கள் உள்ளன, இது அமிலத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவும். வாயு தொல்லையிலிருந்து நிவாரணம் பெற தினமும் வாழைப்பழம் சாப்பிடலாம்.

வெந்தயம்
வாயு பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் வெந்தயத்தை, அமில நியூட்ராலைசர் என்று சொல்லலாம். இது செரிமான பிரச்சனைகளை நீக்குவது மட்டுமின்றி வயிற்று வலியிலிருந்தும் நிவாரணம் தருகிறது. வறுத்த வெந்தயத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் பலன்களைப் பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் பொதுவானவை. இதற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது. மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இந்த பரிந்துரைகளை கருதக்கூடாது. மருத்துவரின் அறிவுரையை பெற்று பிரச்சனையை தீர்ப்பதே சிறந்தது)

மேலும் படிக்க | சட்டுபுட்டுனு உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More