Home> Health
Advertisement

டயட் வேண்டாம் ‘இதை’ செய்தாலே எடை சட்டென குறையும்! என்ன தெரியுமா?

Weight Loss Without Diet : உடல் எடையை குறைப்பதற்கு நாம் டயட்டில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். எடையை குறைக்க வேறு என்னென்ன செய்யலாம்? இதோ விவரம்!   

டயட் வேண்டாம் ‘இதை’ செய்தாலே எடை சட்டென குறையும்! என்ன தெரியுமா?

Weight Loss Without Diet : நவீன கால உலகில் பலர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் வகையிலும் எடையை குறைக்கும் வகையிலும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் ஜிம்மிற்கு சென்று உடலை குறைக்க, ஒரு சிலர் வீட்டிலேயே இருந்து பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து எடையை குறைத்து வருகின்றார். இதற்கு நேரம் இல்லாதவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகின்றன. இதனுடன் சேர்ந்து டயட்டும் இருந்தால் உடல் மடமடவென குறையும் என்பது பலரது கருத்து. ஆனால் அது அவசியமில்லை என்கின்றனர் ஒரு சில மருத்துவர்கள். டயட்டின்றி உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

படி ஏறுதல்: 

படி ஏறுதல் என்பது கொழுப்பை இருக்கும் அது தீவிர உடற்பயிற்சிகளும் ஒன்றாகும். இதனால் இதை ஆரோக்கியமும் வலுப்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த உடற்பயிற்சியின் போது  உடலில் உள்ள பல்வேறு தசைகள் செயல்படும். குறிப்பாக கால் மற்றும் பின் பகுதி. இது குறித்து வெளியாகி உள்ள பிரபல பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிக்கையில், ஒரு படிக்கு 0.17 சதவீதம் கலோரி குறையும் என்று கூறப்பட்டிருக்கிறது. தை தினமும் செய்தால் எடையை வேகமாக குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.

கயிறு தாண்டுதல்: 

கயிறு தாண்டுதல் என்பது குழந்தைகளுக்கான உடற்பயிற்சி மட்டுமல்ல. பெரியவர்களும் இதனை காலையில் அல்லது மாலையில் செய்யலாம். சிறிது நேரம் செய்தாலே அதிக கலோரிகளை குறைக்கும் உடற்பயிற்சிகளுள் ஒன்று கயிறு தாண்டுதல் ஆகும். ஒரு நிமிடம் கையில் தாண்டுதல் உடற்பயிற்சியை செய்தால் பத்து கல்லூரிகள் குறையும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு பத்து முதல் 15 நிமிடங்கள் வரை கயிறு தாண்டுதல் உடற்பயிற்சி செய்வது உடலை கட்டுக்குப்பாக வைத்துக் கொள்ள உதவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

fallbacks

பைலட்ஸ் உடற்பயிற்சி: 

உடலை வலுப்படுத்த உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, பைலட்ஸ் உடற்பயிற்சிகள். இது உடலை தொடர்பாக வைத்துக் கொள்ளவும் உடல் தோரணியை மாற்றவும் உதவுமாம். இது குறித்து நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் பன்னிரண்டு வாரங்கள் தொடர்ந்து இந்த உடற்பயிற்சியை செய்பவர்களின் தசைகள் வலுப்பெற்று இருப்பதாகவும் அவர்களின் உடல் மேலும் வலிமை பெற்றுள்ளதாகவும்  கூறப்படுகிறது. 

ஜாக்கிங்:

ஓட்ட பயிற்சி, அதிக கலோரிகளை குறைந்த நேரத்தில் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளும் உதவும் உடற்பயிற்சிகளும் ஒன்றாகும். 30 நிமிடங்கள் மிதமான ஓட்ட பயிற்சி செய்தால், 298 கல்லூரிகள் குறையும் என்று கூறப்படுகிறது. முதலில் நடைபயிற்சி செய்து பழக வேண்டும். வேக நடை பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஜாக்கியம் செய்யலாம். ஒரு நாளைக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஜாகிங் செய்வதை வழக்கமாக கொள்ளலாம். வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை சாக்கின் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

யோகா: 

யோகா, மனதை மட்டுமல்ல உடலையும் சாந்தப்படுத்தும் அற்புதமான உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும்.  யோகாவை ஒரு வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை வரை செய்யலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More