Home> Health
Advertisement

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்தியாவில்  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இன்று 6 கோடியை கடந்தது. என அரசு தகவல் வெளியிட்டுள்லது

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இந்தியா கொரோனா தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு அனுப்பி வைத்து  கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், உலகிற்கு உதவி  இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.

 

இதுவரை 6,02,69,782 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. என்றும், இவர்களில் 2,77,24,920 பயனாளிகள் 60 வயதுக்கு மேற்பட்டோர் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  71-ம் நாளான நேற்று மட்டும் 21,54,170 தடுப்பூசிகள் போடப்பட்டன.

கொரோனா நோய்த்தொற்று, பரவும்  வேகம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 62,714 புதிய தொற்று  பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்திற்குள், கொரோனா தொற்று காரணமாக 321 பேர் உயிர் இழந்துள்ளனர்.

நாட்டில் மொத்த தொற்று (Corona Virus) பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,71,624 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  இறந்தவர்களின் எண்ணிக்கையும் 1,61,552  என்ற அளவை எட்டியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நாட்டில் 4,86,310 பேர்  சிகிச்சையில் உள்ளனர், 1,13,23,762 பேர் இந்த நோயிலிருந்து குணம்டைந்துள்ளனர்.

கொரோனா பரவல் தொடர்பாக 12 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், செயலாளர்கள், அதிக பாதிப்பு உள்ள 46 மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய உயர் நிலை குழுவினரிடம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார். 

COVID-19 இறப்புகளில் 90% 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். மக்கள் கொரோனா நெறிமுறையை திவிரமாக பின்பற்றுவதில்லை என கூறியுள்ள சுகாதார அமைச்சகம், இன்னும் 44% பேர் மட்டுமே மாஸ்குகளை அணிகின்றனர் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.  மக்களின் கவனக்குறைவு தொற்று பரவுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. 

ALSO READ | ஜூஸ் அல்லது டீயுடன் மருந்து சாப்பிடுகிறீர்களா? உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More