Home> Health
Advertisement

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 79-வது உறுப்பு

உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். 

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 79-வது உறுப்பு

புதுடெல்லி: உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். 

மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு' இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது. 

இந்நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனி உறுப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார். 

மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த உறுப்பு தொடர்பான நோய்களை வகைப்படுத்தி, அவற்றை குணப்படுத்துவது எப்படி என்ற ரீதியில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

உடலில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுமடிப்பு என்ற இந்த உறுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவிற்கேற்ப, இந்த புதிய உறுப்பின் இயக்கம் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள முடியும். 

பொதுவாக இதயம், மூளை, கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் மனித உடலில் ஐந்து உறுப்புகள் ஆகும், தற்போது 79 உறுப்புகள் கருதப்படுகிறது அதில் நடுமடிப்பு 79 உறுப்பு ஆகும்.

Read More