Home> Health
Advertisement

உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைவதை உணர்த்தும் அறிகுறிகள்!

உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் திடீரென்று ஒருவித பய உணர்வு, வியர்த்து கொட்டுதல், பதட்டம், இனம் புரியாத கவலை மற்றும் பயம் போன்றவை காரணமில்லாமல் ஏற்படுகிறது.    

உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைவதை உணர்த்தும் அறிகுறிகள்!

உடலின் சீரான இயக்கத்திற்கு குளுக்கோஸ் இன்றியமையாதது, இதில் ஏற்படும் மாற்றத்தால் நமது உடலில் நாம் பல விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.  உடலுக்கு சிறந்த எரிபொருளாக குளுக்கோஸ் செயல்படுகிறது, உடலின் அனைத்து செல்களுக்கும் இது ஆற்றலை வழங்குகிறது.  நமது உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் சில அறிகுறிகள் வெளிப்படும், அதனை வைத்து நாம் எந்தநிலையில் இருக்கிறோம் என்பதை கண்டறிந்து கொள்ளலாம்.  ரத்த சர்க்கரையின் அளவு குறைவதை நாம் கவனிக்காமல் விட்டோமேயானால் பல ஆரோக்கிய சிக்கல்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும்.  ரத்த சர்க்கரை அளவு குறைவதனால் நீரிழிவு நோயாளிகள் சில சுய நினைவை இழந்து கோமா நிலைக்கு கூட சென்று விடுவார்கள், சில சமயம் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.  ரத்த சர்க்கரை அளவு குறையும்பொழுது நமது உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை நாம் கவனித்து அதற்கு தகுந்த சிக்கிச்சை அளிக்கவேண்டியது அவசியமானதாகும்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஏற்படும் கொழுப்புக் கட்டிகளுக்கும் கேன்சருக்கும் தொடர்பு?

ரத்த சர்க்கரை அளவு உடல் செயல்பாட்டிற்கு முக்கியமானது, அப்படி இருக்கையில் இதன் அளவில் குறைவு ஏற்படும் சமயத்தில் நமது மூளை மற்றும் மற்ற முக்கியமான உடல் உறுப்புகள் செயலிழக்க நேரிடும்.  சர்க்கரையின் சரியான அளவு 7--100mg/dl, இந்த அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.  வயிற்றில் ஒருவிதமான சத்தம் கேட்பது உங்கள் உடலுக்கு தேவையான உணவை நீங்கள் அளிக்க வேண்டும் என்பதன் அறிகுறியாகும்.  உங்கள் உடல் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களை வேண்டுகிறது, உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்போது அதிக பசியுணர்வு ஏற்படுகிறது.

fallbacks

உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் திடீரென்று ஒருவித பய உணர்வு ஏற்படுகிறது, வியர்த்து கொட்டுதல், பதட்டம், இனம் புரியாத கவலை மற்றும் பயம் போன்றவை காரணமில்லாமல் ஏற்படுகிறது.  இதனால் சிறிது நேரம் உங்கள் மூளை சுறுசுறுப்பாக இல்லாமல் மந்தமாக செயல்பட தொடங்குகிறது.  மேலும் கண்களின் பார்வை தெளிவற்று மந்தமான தோற்றம் தெரிய தொடங்குகிறது, பார்வை திறன் மந்தமாக தெரிய தொடங்கும்போதே நீங்கள் ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.  அதனைத்தொடர்ந்து மற்றொரு அறிகுறியாக உங்களால் சுறுசுறுப்பாக இயங்கமுடியாமல் ஒருவிதமான அரை தூக்க நிலையில் சோர்வாக காணப்படுவது உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைவதற்கான அறிகுறியாகும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More