Home> Health
Advertisement

திருமணமான ஆண்கள் வலிமை பெற... மிளகில் மறைந்திருக்கும் வேற லெவல் நன்மைகள்

Medicinal Value Of Black Pepper: திருமணமான ஆண்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக்கொள்ள, மிளகை பொடியாக்கி சுடு தண்ணீரில் தினமும் குடிப்பது நன்மை தரும். 

திருமணமான ஆண்கள் வலிமை பெற... மிளகில் மறைந்திருக்கும் வேற லெவல் நன்மைகள்

Medicinal Value Of Black Pepper: கருப்பு மிளகு நல்ல காரணமான மசாலாவாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் பல நோய்களை வீட்டிலேயே குணப்படுத்த முடியும். அந்த வகையில், தினமும் காலையில் வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் இதனை பொடியாக்கி கலந்து குடித்தால், நம் உடலுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். ஆண்கள் கருப்பு மிளகு சாப்பிடுவது ஏன் முக்கியம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

1. வயிற்றுக்கு நல்லது 

வயிற்றில் வாயு அல்லது அமிலத்தன்மை இருந்தால், எலுமிச்சை சாறுடன் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து குடித்தால் ஒரு நொடியில் வலி குறையும்.

2. சகிப்புத்தன்மையை அதிகரிக்கும்

இளஞ்சூடான நீரில் கருப்பு மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும். மேலும், உடலில் நீர்ச்சத்து குறையாது. கறுப்பு மிளகாயில் கேப்சைசின் என்ற கலவை உள்ளது, இதன் காரணமாக இரத்த நாளங்கள் விரிவடைகின்றன, இதன் காரணமாக இரத்தம் வேகமாக பாய்கிறது. திருமணமான ஆண்கள் கண்டிப்பாக இந்த பானத்தை குடிக்க வேண்டும்

மேலும் படிக்க | முகம் மற்றும் முடியில் அதிசயங்களை செய்யும் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்

3. பதற்றத்தை அகற்றும்

கருப்பு மிளகில் பைபரின் உள்ளது மற்றும் இது மன அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக கருப்பு மிளகு மக்களின் பதற்றம் மற்றும் மனச்சோர்வை நீக்க உதவுகிறது.

4. ஈறு பலவீனத்தில் நிவாரணம்

கருப்பு மிளகு ஈறு வலிக்கு விரைவான நிவாரணம் அளிக்கிறது. கருமிளகு, ஜாதிக்காய், கல் உப்பு ஆகியவற்றை சம அளவில் கலந்து பொடி செய்து, சில துளிகள் கடுகு எண்ணெயைக் கலந்து, பற்கள் மற்றும் ஈறுகளில் தடவி, அரை மணி நேரம் கழித்து வாயைக் கழுவ வேண்டும். இதன் மூலம், உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலி பிரச்சனையும் நீங்கும்.

5. புற்றுநோயில் இருந்து பாதுகாக்கப்படும்

கருப்பு மிளகு சாப்பிடுவது பெண்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கருப்பு மிளகாயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள் மற்றும் பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, இது பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. 

6. சளி பிரச்சனையை நீக்குகிறது

இது தவிர சளி பிடித்தால் சுடு பாலில் கருப்பட்டி கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். இது தவிர, மீண்டும் மீண்டும் சளி வரும், தொடர்ந்து தும்மல் வந்தால், மிளகின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரிக்கவும். அதாவது, பாலில் கருப்பட்டி கலந்து முதலில் ஒரு மிளகில் இருந்து குடிக்க தொடங்குங்கள். தினமும் ஒவ்வொரு எண்ணிக்கையில் மிளகை அதிகப்படுத்தி, 15 மிளகு வரும் வரை குடியுங்கள். பின், 15 மிளகு வந்த உடன் அடுத்தடுத்த நாள்களில் ஒவ்வொன்றாக குறைத்து ஒரு மிளகுக்கு கொண்டு வாருங்கள். இப்படி குடித்தால் சளி பிரச்னையில் நீண்ட கால பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நரை முடியை மறைக்க இதை மட்டும் தடவுங்க.. அசந்துபோயிடுவீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More