Home> Health
Advertisement

இந்த காயை வாரத்தில ரெண்டு நாள் சாப்பிட்டா, புற்றுநோய் வராது! நோய்க்கு எதிரி பழுபாகல்

Anti Cancer Vegetable: பழுபாகல் அல்லது மெழுகு பாகல் என்ற காய். இது பச்சை நிறத்தில் லிச்சி போன்று காணப்படுகிறது. மழைக்காலத்தில் சுலபமாக கிடைக்கும் இதன் உயிரியல் பெயர் மோமோர்டிகா டியோய்கா

இந்த காயை வாரத்தில ரெண்டு நாள் சாப்பிட்டா, புற்றுநோய் வராது! நோய்க்கு எதிரி பழுபாகல்

அதிகம் அறியப்படாத காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, மழைக்காலத்தில் எளிதாகக் கிடைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் காய் இது. காய்கறி விலைகள் விண்ணை முட்டும் நிலையில், ஊட்டச்சத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், மலிவான பருவகால காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பது பட்ஜெட்டில் துண்டு விழாமல் தடுக்கும். குறிப்பாக அவை அந்தந்த பருவத்தில் நோய்கள் வராமல் தடுக்க உதவும்.

அதில் முக்கியமான ஒன்று பழுபாகல் அல்லது மெழுகு பாகல் என்ற காய். இது பச்சை நிறத்தில் லிச்சி போன்று காணப்படுகிறது. மழைக்காலத்தில் சுலபமாக கிடைக்கும் இதன் உயிரியல் பெயர் மோமோர்டிகா டியோய்கா (momordica dioica)  இது ஸ்பைனி கார்ட் (spiny gourd) என்றும் அறியப்படுகிறது. இந்த காயை சமைத்து சாப்பிடலாம் என்பதே பலருக்குத் தெரியாது.  

குட்டிப் பலாக்காய் போல இருக்கும் பழுபாகல், ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பது ஒருபக்கம் என்றால், அதன் சுவையோ மிகவும் ருசியானது. நாட்டு காய்கறிகள் ஒன்றான மெழுகுபாகலை சரியான முறையில் எடுத்துகொண்டால் உடல் ஆரோக்கியம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

மேலும் படிக்க | அனுஷ்காவின் பளபள தேகத்திற்கு இதுதான் காரணமா..? வெளியானது ஸ்கின் கேர் சீக்ரட்! 

 

பழுபாகல் அல்லது மெழுகுபாகல் காயின் ஆரோக்கிய நன்மைகள்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது: அதிகரிக்கும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும், கட்டுப்படுத்தவும் பழுபாகல் உதவுகிறது. உங்களுக்கு அதிக அல்லது குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது: பழுபாகல் காயை உட்கொள்வதால், ஜலதோஷம் மற்றும் காற்றில் பரவும் பிற வைரஸ்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.  ஜலதோஷம் மற்றும் பிற வைரஸ்களால் ஏற்படும் நோயைத் தடுக்கவும் உதவும்.

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: நிறைய நார்ச்சத்து கொண்ட மெழுபாகல், உடலில் இருந்து கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது. உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், கழிவாக மலம் மூலம் வெளியேற இந்தக் காய் உதவுகிறது.

fallbacks

புற்றுநோயை தடுக்கும்
சில அறிக்கைகளின்படி, புற்றுநோயை எதிர்க்கும் பல சிறப்பு கூறுகள் பழுபாகலில் காணப்படுகின்றன, அவை உடலுக்குள் சென்று புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளை உருவாக்குக்கிறது. அவ்வப்போது பழுபாகல் காயை உண்டு வந்தால், புற்றுநோய் அபாயம் குறைக்கிறது.
 
நீரிழிவு நோய் கட்டுப்பாடு  
உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உங்கள் உணவில் பழுபாகல் காய்கறியை சேர்த்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடையை பராமரிக்க உதவுகிறது: உடல் எடையை பராமரிப்பது இன்று பெரும்பாலானவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது.  ஃபிட்டாக இருக்க போராடுபவர்களுக்கு பழுபாக உதவியாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அவசியமான காய்கறிகளில் ஓன்று பழுபாகல்.

வயதாவதை தடுக்கும் பண்புகள்: வயதாகும்போது தோற்றத்தில் முதுமை வருவதை யாரும் விரும்புவதில்லை. பழுபாகலில் இருக்கும் சிறப்புத் தன்மை, வயதாகும் உடலின் செயல்முறையை மந்தமாக்குகிறது.  

சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது: சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் பாதுகாப்பதில் மெழுகுபாகல் பயனுள்ளதாக இருக்கும்.

கண்பார்வையை கூர்மையாக்கும் காய்: மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போலவே பழுபாகல் காயும் நல்ல கண்பார்வையைப் பராமரிக்க நன்மை பயக்கிறது.

சரும பிரச்சினைகள்: ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது பழுபகலை உட்கொள்வது சருமத்தை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது.

மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது: பழுபாகல் காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், மூளை ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | கம்முன்னு கம்பு சாப்பிட்டா, டாக்டர்கிட்டயே போக வேண்டாம்! கம்பு: அ முதல் .'. வரை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More