Home> Health
Advertisement

டயட், உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க வழி இருக்கா? இது தெரியாம போச்சே..

Easy Ways To Loose Weight Without Diet Or Exercise News In Tamil : பலருக்கு டயட் மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கும். அதை நிவர்த்தி செய்து கொள்வது எப்படி?   

டயட், உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க வழி இருக்கா? இது தெரியாம போச்சே..

Easy Ways To Loose Weight Without Diet Or Exercise News In Tamil : உடல் எடையை குறைப்பது வர்க்-அவுட் வீடியோக்களில் பார்ப்பது போல எளிதான காரியம் அல்ல. இதற்கு விடா முயற்சி, மன தைரியம், மனத்தொய்வை எதிர் கொள்ளும் திறன் என பல விஷயங்கள் இருக்க வேண்டும். இவை இருந்தாலும் டயட்-உடற்பயிற்சி இருந்தாலொழிய உடற்பயிற்சியை குறைக்க முடியும் என்று பல்வேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். இது ஒரு புறமிருக்க, உடல் நிலை காரணமாகவும், சில மருத்துவ முறைகள் காரணமாகவும் சிலரால் உடற்பயிற்சி அல்லது டயட் ஆகியவற்றை பின்பற்ற முடியாமல் பாேகலாம். அப்படி இருப்பவர்கள், சில வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதும், கண்டிப்பாக உடல் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன தெரியுமா? 

1.நன்றாக மென்று சாப்பிட வேண்டும்:

பலர், தாங்கள் சாப்பிடும் உணவுகளை நன்றாக மென்று முழுங்காததாலேயே உடல் எடை அதிகரிப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அதனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் நன்கு அதை மென்று உண்ண வேண்டும். இது ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல இதுவே பழக்கமாகிவிடும். இப்படி உணவை நன்கு மென்று சாப்பிடுவதால் உணவு, சீக்கிரமாக செரிமானம் ஆவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

2.அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது...

நாம், தினசரி உணவை எடுத்துக்கொள்ளும் போது அதில் அதிக கொழுப்புள்ள உணவுகள் எது, அதிக கொழுப்பற்ற உணவுகள் எது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, அதிக கொழுப்புள்ள, எண்ணெய் உணவுகளையோ, எண்ணெயில் பொறித்த உணவுகளையோ எடுத்துக்கொள்ளும் போது கண்டிப்பாக அதை சிறிதளவு மட்டும் எடுத்துக்கொள்ளவும். 

மேலும் படிக்க | வெயில் காலத்தில் தினசரி ஒரு பூசணி சாப்பிடால் இவ்வளவு நன்மைகளா?

3.புரதம் நிறைந்த உணவுகள்:

புரதச்சத்து நிறைந்த உணவுகளை சிறிதளவு எடுத்துக்கொண்டாலும் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு இருக்கும். இதனால் அடிக்கடி பசி எடுக்கும் நிலை தடுக்கப்படும். இது குறித்து நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில், டயட் இருப்பவர்கள் எந்த அளவிற்கு உடல் எடையை குறைக்கிறார்களோ, அதே அளவிற்கு புரத சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்பவர்களும் எடையை குறைக்கின்றனராம். 

4.வீட்டில் சமைத்த உணவுகள்:

பலருக்கு, கடைகளில் விற்கும் உணவுகளை சாப்பிடுவதால் கூட உடல் எடை வேகமாக ஏறலாம். எனவே, பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுபவர்கள், வெளியில் உணவு வாங்கி சாப்பிடுபவர்களை விட வேகமாக உடல் எடையை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

5.அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்..

மருத்துவர்கள் மட்டுமன்றி, பலர் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும் என சொல்லி கேட்டிருப்போம். அடிக்கடி தண்ணீர் குடிப்பது, கண்டிப்பாக உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் குடித்தால் அதிக உணவை எடுத்துக்கொள்வதில் இருந்து தப்பிக்கலாம். மேலும், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமாவதற்கும் உதவும் என்கின்றனர் மருத்துவர்கள். இது, எப்போதும் தண்ணீராக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பழச்சாறு, அப்படியே பழத்தை சாப்பிடுவது போன்ற முறைகளினால் கூட உடலில் நீர்ச்சத்தினை தக்கவைத்து கொள்ளலாம். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குழந்தைகளையும் பாடாய் படுத்தும் சிறுநீரகக் கல்! நொறுக்குத்தீனிக்கு நோ சொல்லுங்க பெற்றோர்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More