Home> Health
Advertisement

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க இந்த அற்புத பானம் போதும்

பெரும்பாலான மக்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பால் சிரமப்படுகிறார்கள், அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் வீட்டிலேயே ஒரு சிறப்பு செய்முறையை பின்பற்றுவதன் மூலம் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்.

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க இந்த அற்புத பானம் போதும்

புதுடெல்லி: இன்றைய காலகட்டத்தின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் அதிக எடை பிரச்சினையால் பெரும்பாலான மக்கள் சிரமப்படுகின்றனர். உடற்பயிற்சி செய்ய நேரமில்லை. ஒட்டுமொத்தமாக, வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாதது உங்கள் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. உடல் பருமனாக இருப்பதால் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த கட்டுரையில், சில டிப்ஸ் கொண்டுவந்துள்ளோம், அதை செய்தால் 30 நாட்களில் உடல் எடையை ஈஸியாக குறைக்கலாம்.

உங்கள் தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைப்பது?
அதிகரித்து வரும் எடையைக் குறைக்க எங்களிடம் ஒரு வீட்டு வைத்தியம் உள்ளது, எனவே நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஓமம் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும். ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை குடியுங்கள். இதனால் தொப்பை கொழுப்பு குறையும். இதில் தைமால் உள்ளது, இது தொப்பையை குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!

fallbacks

தைமாலால் எடை குறைக்க முடியும்
தைமால் வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை நீக்குகிறது. இது தவிர, அயோடின், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதில் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் முக்கியமான கூறுகள் ஆகும்.

தினமும் ஓமம் தண்ணீர் குடிக்கவும்
ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய் நீங்கும், இது தவிர, மலச்சிக்கல் நீங்கும். வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர். எதைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு கேஸ் ஏற்படும். அத்தகைய சூழலில் ஓமம் தண்ணீரை குடித்தால் சில நாட்களில் நல்ல பலன் தெரியும். ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More