Home> Health
Advertisement

செய்முறை: 'மதுரா பேடா' - பார்க்க வீடியோ

செய்முறை: 'மதுரா பேடா' - பார்க்க வீடியோ

தேவையான பொருள்கள்:

பால் - 1 லிட்டர், 
சர்க்கரை - 1 கப், 
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், 
ஏலக்காய் தூள் - சிறிதளவு, 
பிஸ்தா சீவல் - சிறிதளவு.


செய்யும் முறை:-

அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சி அது கெட்டியாகும் போது சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக கரண்டியால்தான் கலக்கவும். பால் சுண்டதும் இறக்கி வைக்கவும். பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து கரண்டியால் கெட்டியான பதத்துக்கு வரும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும். பிறகு ஆறியதும் நெய் தடவிய தட்டில் கொட்டி தேய்க்கவும். அதை சிறு சிறு உருண்டைகளாக பேடா வடிவத்துக்கு செய்யவும். மத்தியில் கட்டை விரலால் அழுத்தி பிஸ்தா சீவலை அதில் வைத்து பின் பரிமாறவும்.

வீடியோ பார்க்க:-

Read More