Home> Health
Advertisement

சுயஇன்பம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்/தீமைகள்!

சுயஇன்பம் செய்வதனால் விந்தணுக்கள் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது.  மருத்துவர்களின் கூற்றுபடி நாள் ஒன்றுக்கு 8 கோடி விந்தணுக்கள் நம் உடலில் உற்பத்தி ஆகின்றன.

சுயஇன்பம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்/தீமைகள்!

சுயஇன்பம் பற்றிய பல புரிதல்கள் பலருக்கு தெரியாமலே இருந்து வருகிறது.  அது சரியா? தவறா? போன்ற சந்தேகங்கள் குறிப்பாக இளைஞனர்களுக்கு வருகிறது.   முன்பு பருவம் வந்த இளைஞர்கள் மற்றுமே பேசி வந்த விஷயங்களை இன்றைய தலைமுறை சிறுவர்கள் முதற்கொண்டு பேசி வருகின்றனர். சுயஇன்பம் செய்வதனால் விந்தணுக்கள் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது.  மருத்துவர்களின் கூற்றுபடி நாள் ஒன்றுக்கு 8 கோடி விந்தணுக்கள் நம் உடலில் உற்பத்தி ஆகின்றன.   தானாக சுயஇன்பம் செய்ய வில்லை என்றாலும் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தானாகவே வெளியேறிவிடும்.  

ALSO READ உங்களுக்கு ‘இந்த’ பிரச்சனை இருந்தால் பேரீச்சபழத்திற்கு ‘NO' சொல்லுங்க..!!

ஒவ்வொரு ஆணும் சுயஇன்பம் செய்து கொள்வதில் தப்பு இல்லை, மாறாக அது addiction ஆகாமல் இருக்கும் வரை.   வேளையில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, துணைவி உடன் இருக்கும் பொழுதும் சுயஇன்பம் செய்ய ஆசைப்படுவதே addiction என்று கூறப்படுகிறது.  முன்னோர்கள் காலத்தில் திருமணம் 15 முதல் 18 வயதில் நடந்ததால் அவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருந்தது இல்லை.  ஆனால் தற்போது உள்ள இளைஞர்கள் திருமணத்தை மிகவும் தாமதமாக பண்ணுவதாலேயே இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகிறது.  

சுயஇன்பம் செய்து கொள்வதனால் நமது மன அழுத்தம் குறைய அதிக வாய்ப்புள்ளது.  மற்ற பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளாமல் இருப்பதற்கு சுயஇன்பம் செய்துகொள்வது மிகவும் நல்லதே.  சிலருக்கு தினமும் பண்ண புடிக்கும், சிலருக்கு வாரம் ஒருமுறை பண்ண புடிக்கும்.  சுயஇன்பம் செய்து கொள்வதில் எவ்வித கணக்கும் இல்லை, மாறாக அது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று ஆகாமல் இருக்கும் வகையில் சுயஇன்பம் செய்து கொள்வது தவறில்லை.   

fallbacks

சுயஇன்பம் செய்வதால் உடம்பில் எடை குறைதலோ, முடி கொடுதலோ போன்ற எந்த பிரச்சனைகளும் வராது .  சுயஇன்பம் செய்து கொள்வதால் ஆணுறுப்பின் அளவு சிறிது ஆகும் போன்றவரை வெறும் புரளியே.  addiction இல்லாமல் செய்தால் இது நமது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றே.

ALSO READ கிட்னி பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா? 5 டிப்ஸை கட்டாயம் பின்பற்றுங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More