Home> Health
Advertisement

தம்பதிகள் குழந்தை பெற திட்டமா? கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!

IVF சிகிச்சை எடுக்கப்போகும் நபர்கள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் பச்சை முட்டை கலந்த உணவு வகைகளை சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.  

தம்பதிகள் குழந்தை பெற திட்டமா? கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!

IVF எனப்படும் கருத்தரிப்பு சிகிச்சை மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கிறது, தற்போது இந்த இன் விட்ரோ கருத்தரிப்பு (IVF) சிகிச்சை பிரபலமாக இருந்து வருகிறது.  இந்த சிகிச்சையின் மூலமாக குழந்தைப்பேறு கிடைக்கும் என்றாலும் நீங்கள் உங்கள் உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் IVF சிகிச்சை உங்களுக்கு அதிகம் வெற்றியடைய வாய்ப்புள்ளது.  உடல் ஆரோக்கியம் மற்றும் சரியான உணவுகளை உட்கொள்வது ஆகியவற்றை பொறுத்து தான் ஒருவருக்கு IVF சிகிச்சை வெற்றியடைய வாய்ப்புள்ளது.  IVF சிகிச்சையைப் பெறும்போது இந்த உணவுமுறையை தான் பின்பற்ற வேண்டும் என்கிற நிபந்தனை எதுவும் இல்லை, இருப்பினும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.  இந்த சிகிச்சை மேற்கொள்பவர்கள் சரியான நேரத்தில் சரியான அளவில் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். 

மேலும் படிக்க | இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்! ஜாக்கிரதை! 

இதன் காரணமாக சைவ உணவு உண்பது அல்லது ஏதேனும் நீங்களே ஒரு டயட்டை பின்பற்றுவது நல்லதல்ல.  இந்த நேரத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உணவின் மூலம் பெறுவது அவசியமாகும்.  நீங்கள் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமற்ற உணவுகள் விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம் மற்றும் விந்தணுக்கள் முதிர்ச்சியடையக்கூடும்.  உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுவதன் மூலம் நீங்கள் கர்ப்பமாகுவது நூறு சதவீதம் வெற்றி பெறலாம்.

1) IVF சிகிச்சை எடுக்கப்போகும் நபர்கள் பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும், இந்த பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் அதிகளவு ஹார்மோன் எச்சங்கள் உள்ளது மற்றும் இதனால் உங்கள் சிகிச்சை பலனளிக்காமல் போகலாம்.  

2) மயோனைஸ், பிஸ்கட் கிரீம் மற்றும் சாலட் டிரஸ்ஸிங் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களில் பச்சை முட்டைகள் ஒரு பொதுவான மூலப்பொருளாக உள்ளது.  இந்த பச்சை முட்டையில் சால்மோனெல்லா எனும் வைரஸ் உள்ளது, இதனால் உணவு நஞ்சாகி பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.  இதன் காரணமாக, பச்சை முட்டைகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, முட்டை சாப்பிட விரும்புபவர்கள் முழுமையாக சமைத்த முட்டையை சாப்பிடலாம்.

3) காஃபின் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வது கருவின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும், ஆல்கஹால் சாப்பிடுவதால் துத்தநாகம் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவற்றின் டையூரிடிக் விளைவுகளால் தேவையில்லாத சப்ளிமெண்ட்ஸ் வெளியேற்றப்படுகிறது.  எனவே, IVF சிகிச்சையின்போது ஆல்கஹால், அதிகப்படியான காஃபின் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4) கடல் உணவுகள் புரதம் மற்றும் முக்கிய கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாக இருந்தாலும், அதை பச்சையாகவோ அல்லது ஓரளவு சமைத்தோ சாப்பிடுவது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.  மேலும் கடல் உணவுகளில் அதிக அளவு பாதரசம் உள்ளது, இது கருவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி குழந்தை பிறப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

5) சோயா சேர்க்கப்பட்ட உணவுகள் ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜெனிக் விளைவை ஏற்படுத்தும், இதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.  குறைந்த விந்தணு எண்ணிக்கை ஏற்படாமலிருக்க ஆண்கள் சோயா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது விந்தணு உற்பத்தியை பாதிக்கும்.

மேலும் படிக்க | பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்: ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More